காற்றே

ஊழியின் உச்சத்தில்
ஆழியின் மிச்சத்தில்
உயிர் ஏங்கும் அச்சத்தில்
உறைந்தாலும்
எல்லாம் கரைந்து
பூமியே புதையுண்டு
போனாலும்
மீளாத் துயில் கொள்ளும்
பூமியின் தலை நீவி
மீண்டும் அவள் இதயம் துடிக்க
வைக்கும் தேவன் இந்த காற்று.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (1-Dec-14, 3:44 pm)
Tanglish : kaatre
பார்வை : 86

மேலே