என்னவனின் விழிகளின் அழகு

என்னவனே...
உன் விழிகள் என்னும் வீணையில்
காதல் மொழிகளை இசையாக
மீட்டவனே....
உன் காதல் மொழியில்
மெளனமாக என்னை
மெய்மறக்க செய்தாய் ...
உன் விழி என்னும் அம்பை
காதல் வில்லாக எய்தாய் ....
உன் மடியில்
காதல் பறவையாக வீழ்த்தேன்....
மின்னலின் விழிகளை
கொண்டவனே....
வானவில்லாக மாறியது
என் வாழ்க்கை ....
திருடி சென்றாய் கள்வனே
உன் கண்களால் ...
என்னை மொத்தமாக
காதல் உலகத்திருக்கு ...
கடத்திசென்றாய் காதல் கண்ணாலனே
உன் இதயத்திற்குள்....
மாட்டிக்கொண்டேன் மாயக்காரனே
உன் காதல் வித்தையில்....
கண்களால் கைது செய்து
உன் இதயத்திற்குள்
அடைத்துவிட்டாய் ...
என்றுமே உன் இதயத்திலே
வாழ வேண்டுமடா ...
மண்ணில் நான்
புதையும் வரை ....