என் மரணம் வரை நீ வேண்டும்
உடல் சுகம் கேட்டு
உன்னை அழைக்கவில்லை
உண்மையாய் உன்னோடு
உறுதியாய் நான் வாழ.
உன்னை அழைக்கிறேன்
உரிமைகள் பல தருகிறேன்
உன்னதமாய் நாம் வாழ
என்னோடு வந்து விடு..
மனைவி என்ற மாளிகையில்
உன்னை வைத்து..மங்களமாய்
வாழ வைத்து..மழலைகள்
பல பெற்று..மகிழ்ச்சியோடு..
என் மரணம் வரை
உன்னை..காத்து. மன
இறகை விரித்து இன்பமாய்
இணைந்திடலம் வா கண்ணே.
.