அறைகளை ஆளும் அரக்கன் - வேலு
உடைபடும் ஒரு இரகசியத்தின் கதவு
ஆயிரம் கைகள் ஓசை மறக்கப்படும்
ஜன்னல் வழியே தென்றல் தூது - கண்ணில்
வெளிச்சத்தை மறைக்கும் உணவு மயக்கம்
தொலைந்த ஒன்றின் தேடல் அறைகளுக்குள்
அழுக்கு படிந்த பழக நண்பர்கள் கையெழுத்து கிறுக்கல்கள் பார்வை
ஊமை தொலைக்காட்சி
குளிக்க தாயராக இருக்கும் துணிகள் வாசம்
தனிமையின் நேரம் அளக்கப்படும் கருவி
என்னும் அறியபடாத சோகம்
அறைகளை ஆளும் அரக்கனாகி போகிறேன் ஒவ்வொரு விடுமுறை நாளிலும் !!!