இது தான் காதல் -கயல்விழி

விதியினால் வரும்
விபத்தல்ல இது
விழியினால் வரும்
விபத்து இது

மொழியினால் பேசும்
வார்த்தை அல்ல இது
மௌனத்தால் புரிந்திடும்
வார்த்தை இது

குற்றத்திற்கு அடைக்கப்படும்
சிறையல்ல இது
நிரபராதியும் ஆயுள் தண்டனை
அனுபவிக்கும் சிறை இது

எதிர் பார்த்து காத்திருக்கும்
இரயில் அல்ல இது
எதிர் பாராமல் இதயம் வருடும்
இன்னிசை இது

குத்தி எம்மை ரணமாக்கும்
கூறிய வாள் அல்ல இது
குடியிருந்தே எம்மை கொல்லும்
கொடிய நோய் இது

சாதி மத மொழி அமைக்கும்
சங்கம் அல்ல இது
சகலரும் சங்கமமாகும்
சமுத்திரம் இது

இது இது என்றால்
எது தான் அது
என்னையும் உன்னையும்
ஆட்டிப்படைக்கும் காதல்
தான் அது ...!!

எழுதியவர் : கயல்விழி (2-Dec-14, 12:08 pm)
பார்வை : 198

மேலே