மனித நேயம்
முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி
முகில் கண்டாடும் மயிலுக்கு
மேலாடை சூட்டினான் பேகன்
கிடைத்தற்கரிய நெல்லிக் கனியை
ஔவைக்கு ஈந்தான் அதியமான்
புல் பூண்டுகளுக்கும் உயிர் உண்டு
அதனிடம் அன்பு கொளல் உயர் பண்பு
வாடிய பயிர் கண்ட வள்ளலார்
தேடியதன் வாட்டம் போக்கினார்
இராமாயணம் முடிவில் யுத்தக் காண்டம்
நிராயுதபானியாய் நின்றான் இராவணன்
"இன்று போய் நாளை வா"எனக் கூறி
இராமன் பகைமைக்கும் இரக்கம் காட்டினான்
மனித நேயத்தை அங்கே நிலை நாட்டினான்........
அன்பே மனித நேயத்தின் அடிப்படை-அதை
ஆருயிர் பண்பாய் வளர்த்திடுவோம்
அகிலத்தை அன்பால் இணைத்திடுவோம்....!
கவிதாயினி அமுதா பொற்கொடி