இழந்தான் ஓர் உன்னதக் காதலை

சிறு வயதில் கட்டிய கோட்டை
......என் காதல் ...........
உன் விழிகளையே -என்
விதி என நினைத்து
வாழ்வையே உனக்கு அர்ப்பணித்தேன்
உன் பார்வையே -என்
வாழ்க்கையே உயிர்ப்பிக்கின்றது என
நினைத்து -உன்னையே
பின் தொடர்ந்து வந்தேன்
நீயும் என் விழிகளைப் பார்ப்பதை எண்ணி -என்
பாதி தூக்கத்தை இழந்தேன்
என் காதலை எனக்குள்ளே தாறுமாறா
கற்பனையை வளர்த்தேன்
அனைவருக்கும் தெரிந்தது நம் காதல்
ஆனால் நமக்கு மட்டுமே தெரியும் -நாம்
இதுவரை பேசியது கூட இல்லை என்று
காதலுக்கு மொழிகள் தேவையில்லை என்று
நினைத்து வந்தேன்
சில மெளனம் சம்மதம் சொல்லும் -உன்
மெளனம் எனை பிடிக்கவில்லை என்றுதான் சொல்லும்
என்பது எனக்கும் விளங்கவில்லை
காதல் என் கண்ணை மறைத்ததால்
எனை ஒதுக்க நினைத்த உன்னிடம்
என்னவென்று நான் கேட்பேன் -எனை
ஒதுக்குவதற்கான காரணத்தை
பின்பு அறிந்து கொண்டேன்
காதல் ஜாதி ,மதம் ,மொழிகளெல்லாம் மறந்தது
என் மனம் எண்ணினாலும்
என்னவன் மனம் இவையெல்லாம் பார்த்து
அழகான வாழ்வு என நினைத்திருந்த -அவன்
வாழ்க்கையை எனை ஏற்க மறுத்து அலங்கோலம் ஆக்கினாய்
அதற்க்கு ஒரு காரணமாக -எனைப்
பார்க்கையில் உனக்கு காதல் உணர்வு வரவில்லை
என்றாயே அன்றே என் காதல் அர்த்தமில்லாததை உணர்ந்தேன்
உன்னை விட்டு பிரிந்தேன்
இரண்டு வாரம் இதை நினைத்து நான் அழுதேன்
ஒரு நாளுக்கு எனை நினைத்து நீ இரண்டு ஜென்மங்கள் அழுதாலும்
என் உன்னதக் காதலை நீ பெற முடியாது
சிறு வயதில் கட்டிய-என்
மனக்கோட்டை அது மனக்கோட்டை அல்ல
என் வாழ்வின் மணற்கோட்டை