வரம் வேண்டும் காதலன் நான்

தினம் தினம் உன்னை காண
வரம் வேண்டும் காதலன் நான்
நீ என் தாரமாக வந்தால்
வாழ்வேன் நான் ....

உணர்ச்சிகள் குறி வைத்து
என் காதல் அல்ல
உணர்வுகள் உயிராய் வைத்து
உன் மீது காதல் என்றென்றும்


சம்மதம் சொல்லி பார்
உள்ளங்கையில் தாங்காமல்
உள்ளத்தில் தாங்கி நிற்ப்பேன்
உனக்கேதும் நேர்ந்து போனால்
மறுகணம் உயிர் துறப்பேன்

எழுதியவர் : ருத்ரன் (4-Dec-14, 6:15 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 53

மேலே