என்னை மீட்டுகொடு

ஒரு கனவினை காதலிக்க
முதன் முறை முயல்கின்றேன்
ரசித்ததை நான் சொல்ல
தினம் வார்த்தை தேடி நின்றேன்

சில நேரம் குற்றலாமாய்
சில நேரம் சாரல் மழையாய்
சில நேரம் தரிசு நிலமாய்
வாடித்தான் போகிறது
உன் வருகை நின்று போனால்

வானம் பார்த்த பூமியாய்
உன் கண்கள் பார்த்த காதல்
அர்த்தம் தேடி என்னை தேடி
இரண்டுமே தொலைத்தவன் நான்

தேடி கொடு
உன் காதல் கொண்டு
என் கவிதை என
நீயே மாறிவிடு
என்னை மீட்டுகொடு

எழுதியவர் : ருத்ரன் (4-Dec-14, 6:18 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 64

சிறந்த கவிதைகள்

மேலே