இலைவரிகள் கவிதை
*
மரங்களுக்கு எப்பொழுதும்
எதிர்மறை எண்ணங்களில்லை
அப் பச்சை இலைகளின்
மென்மையானச் சிரிப்பின்
சலசலப்புப் பேச்சுக்கள்
இரகசியமற்றவைகள்.
இதமானக் காற்றை
இலவசமாக வழங்கும்
வள்ளல் மனம்
படைத்தவைகள் மரங்கள்.
நிழலுக்கு
ஒதுங்குகின்றவர்களைக் கூட
யார் என்ன நிறமென்று
பார்ப்பதில்லை மரங்கள்.
மரத்திடமிருந்து
மனிதர்கள் கற்பதற்கு
எத்தனையோ இலைவரிகள்
உதிர்ந்துக் கிடக்கின்றன.
ஒவ்வொருவரின் இதயத்திலும்
மரம் என்பது மனிதமே என்ற
மனம் விரிய வேண்டும்.
அப்பொழுது தான்
அனைவருக்கும் சித்திக்கும்
ஞான விருட்சத்தின்
பிரபஞ்ச மௌனம்…!!
*