அவன் தான் மனிதன்

கணவனை இழந்த அனாதைப் பெண்
நடந்தே சென்றாள் மருத்துவமனைக்கு
பிரசவ வலியால்துடி துடித்தாள்
செல்லும் வழியோ காட்டு வழி
பேய் பிசாசு இருக்குமோ
என்ற அச்சத்திலே
பேயும் இல்லை பிசாசும் இல்லை
வந்தது மனிதனை விழுங்கும்
அரக்கன் ஆக்ரோசத்துடன்
அதனைக் கண்ட பெண்ணோ
பயத்தால் பிரசவ வலி மேலும் எடுத்து
அங்கேயே விழுந்து விடடாள்
குழந்தை பாதி தலை வெளியே வர
துடித்தது துடித்தாள் பெண்ணும்
அரக்கனோ அதை பார்த்து
அதிர்ச்சியில் துடித்தான்
குழந்தை வெளியே வர
துடித்ததைக் கண்டு மெல்ல
தலையைத் திருப்பி இழுத்தான் வெளியே
பிறந்த குழந்தை அழுதது
பெண்ணின் பயமும் தெளிந்தது..
அரக்கனோ எதனையும் எதிர்பாராமல்
கண்ணீரோடு மறைந்தே சென்றான்
மனிதன் என்கிறோம் மனிதன் இவனே ..
இவன்தான் மனிதன்