புட்டிப் பால்

எனக்கொரு கவிதை சொன்னாள்
''அம்மா'' என்று....

நானும் சொன்னேன் 'ம்ம்மா '' என்று

மீண்டும் எங்க சொல்லு ''அப்பா '' என்று
''ப்ப்பா''என்றேன்

அப்புறம் ''அத்தை '' என்று
நானும் '' த்தத்த '' என்றேன்

நானும் சொன்னேன்'' க்வா க்வா ''

பதிலுக்கு உனக்கு பசி வந்துச்சோ
இரு இரு செர்லாக் ஆத்தி கொண்டு வரேன்

நீ மட்டும் ஏன் ?
நினைத்துக் கொண்டது குழந்தை

நீ என்னை மடியில் அமர்த்தி
''பால் தர மாட்டியா'' என்றது 6 மாத குழந்தை
சிரித்துக் கொண்டே .....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (5-Dec-14, 7:27 am)
பார்வை : 155

மேலே