எவருக்கும் கவலை இல்லை எனக்கு மட்டும் என்ன

எவருக்கும் கவலை இல்லை
எனக்கு மட்டும் என்ன ?

நடுத்தெருவில் விபத்து
நடைபாதையில் கற்பழிப்பு
நாய்கள் போல் பேரூந்தில்
காதலின் பெயரில் காமலீலைகள்
இதில் எவருக்கும் கவலை
இல்லை எனக்கு மட்டும் என்ன?

வயிற்றில் சுமந்தவளும்
வளர்த்து விட்டவரும்
வளர்ந்த பிள்ளைகளும்
வளரும் பிள்ளைகளும்

வீதியில் வாடி நின்று
வாழ வழி தேடி பிச்சை
இதில் எவருக்கும் கவலை
இல்லை எனக்கு மட்டு என்ன ?

தாய்மொழி நினைவு இல்லை
தாய் நாடும் மனதில் இல்லை
தாகம் தீர்க்க மதுபானம்
தாலாட்டு பாட்டாக துர்வார்த்தை

இவளும் எவனும் இவனும் இவளும்
எங்கயும் போகலாம் எப்படியும் வாழலாம் இப்படி வாழுது இன்றைய
தமிழினம்
இதுபற்றி எவருக்கும் கவலை இல்லை
எனக்கு மட்டும் என்ன

சுத்தபடுதுவதாய் கூறி
நோய்பரப்பும் கிருமிகள்
சாலையோரங்களில் சகஜமாய்
ஓர் நடிப்பு

வாய் பிளந்து ஏமாளிகள்
வர்ணனையில் பூமாலை
இதில் எவருக்கும் கவலை இல்லை
எனக்கு மட்டும் என்ன?

ஓர் நாள் என்னையும் இவை
அனைத்தும்
சூழ்ந்துகொள்ளும் அப்போதும்
எவருக்கும் கவலை இல்லை
ஆனால் எனக்கு..???

எழுதியவர் : கயல்விழி (5-Dec-14, 7:01 am)
பார்வை : 163

மேலே