பட்டாம்பூச்சி முத்தம்

கருவிழிகள் இரண்டும்
விழாக்கோலம் கொள்ள
உன் இருவிழிகளில்
என் இமைசேர்த்து
ஓரப்பார்வவையை ஒருபார்வையாகினாய்......

செவ்விதழ்களில் தீஞ்சுவை
தீண்ட செந்தேனைஊற்றி
உதடுகளில் ஊடல்கொண்டாய்.....

அவ்வூடல் உடலளவில்லாமல்
உயிர்க் கூடலாக்கினாய்..........
இதுதான் காதலா ????????

எழுதியவர் : குயில் (5-Dec-14, 5:09 am)
பார்வை : 80

மேலே