செய்ந்நன்றி யறிதல் 6 - இன்னிசை வெண்பா
கல்லா தவரேயா னாலும் மனமாசே
இல்லாரின் நட்பையே கன்னியப்பா - வெல்ல
மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. 11:6
கருத்துரை:
படித்தவர், படிக்காத பாமரர் என்ற வித்தியாசமின்றி, மனத்தில் நல்ல தூய்மையான எண்ணம் கொண்டவர்களின் நட்பையே கொள்ள வேண்டும். அறிவு, ஒழுக்கத்தில் குற்றமில்லாதவரது நட்பை ஒருவன் மறந்து விடாமலும், துன்பமுற்ற போது தனக்கு உதவி செய்தவரது நட்பை விடாமலும் இருக்க வேண்டும்.

