இலவசம்

அந்திவான அழகு தேசம் அமாவாசையானது...
ஐந்தெழுத்து அசை தானே மந்திரமானது...
மந்திமனமோ மறதி தாங்கும் எந்திரமானது...

சிந்திதெறிக்கும் குருதியும்,
சிந்தைசுமக்கும் மூளையும்,
விந்தைபயக்கும் தாலும்,
கந்தையுடுத்தும் தோலும்,
சுதந்திர அடிமைகளாய்
மந்திர ஐந்தெழுத்துக்கு...

எழுதியவர் : அஞ்சா அரிமா (6-Dec-14, 9:36 pm)
பார்வை : 161

மேலே