கண்ணீர் விலை மதிப்பானது

உணர்வுகளை உணரும் போது
கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது

தாய் சேயை ஈன்றெடுக்கும் போது
தன் பிள்ளை என்ற உணர்வில் ஒரு நிமிடம்
கண்ணீர் சிந்துகிறாள்

குழந்தையை தந்தை கையில் அணைக்கும் போது
தன் பொக்கிஷம் என ஒரு நிமிடம்
கண்ணீர் சிந்துகிறார்

பிள்ளை தவறு செய்யும் போது
தன் பிள்ளை திருந்திடுவான் என்று பெற்றோர் ஒரு நிமிடம்
கண்ணீர் சிந்துகிறார்கள்

தன் பெற்றோர் தன்னிடம் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என
பிள்ளையும் பெற்றோரை நினைத்து ஒரு நிமிடம்
கண்ணீர் சிந்துகிறார்கள்

ஆசிரியர் படிப்பு உனக்கு வரவே இல்லை என்று திட்டும் பொழுது
வெட்கத்தில் ஒரு நிமிடம்
கண்ணீர் சிந்துகிறார்கள்

முற்சியால் முன்னேறிய போது
ஆசிரியர் ஏசியத்தை நினைத்து
இறுமாப்பாய் ஒரு புன் சிரிப்புடன் ஒரு நிமிடம்
கண்ணீர் சிந்துகிறார்கள்

பாடசாலையை விட்டு பிரியும் போது
ஆனந்த அனுபங்களை நினைத்து ஒரு நிமிடம்
கண்ணீர் சிந்துகிறார்கள்

எல்லாத் தடைகளைத் தாண்டி வந்த பிறகும்
தன் காதலுக்காக ஒரு நிமிடம்
கண்ணீர் சிந்துகிறார்கள்

வேலை தேடி ஊருவிட்டு ,நாடு விட்டு
போகும் போது ஒரு நிமிடம்
கண்ணீர் சிந்துகிறார்கள்

கல்யாணம் செய்து புகுந்த வீடு செல்லும் போது
தனது இன்னொரு குடும்பத்துக்கு தன் வீட்டை விட்டு செல்வதை எண்ணி
ஒரு நிமிடம் கண்ணீர் சிந்துகிறார்கள்

தடைகளைத் தாண்டி
தடம் புரளாமல் வாழ்க்கையை ஓட்டி

இறக்கும் போதும் உலகத்தை விட்டு போய்
இன்னொரு உலகத்துக்கு செல்கிறோம் என்று நினைத்து
ஒரு நிம்டம் கண்ணீர் சிந்துகிறார்கள்

கண்ணீர் விடும் ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு யுகம் போல கவலைகள்
இன்பங்களை உணர்த்தும்

கண்ணீரை அடக்கி வைக்காதிர்கள் -அது
உயிரையும் மனதையும் பாதிக்கும்

கண்ணீர் விலை மதிப்பானது -அதனை
தீய செயலுக்காக உபயோகிக்காதீர்கள் ..

எழுதியவர் : keerthana (7-Dec-14, 9:08 pm)
பார்வை : 284

மேலே