சதி வலை கிழித்திட வா
நான் நலமுடன் வாழ
நீ பிரிந்தாய்
எனும் நாராசம்
காதில் விழ
ஓடி வந்தேன்
உயிர் காதலியே !
தேடியுனை
நானடைய
திகைத்து நின்றேன்
உன் நிலை கண்டே !
ஒரு பொட்டின்றி
பூவுமின்றி ..இருப்பதற்கீடாக..
மணம் இன்னும் ஆகாமலே !
ஏனிந்த நிலை உனக்கு
என்ற என் கேள்விக்கு
பதிலிறுக்க முடியாமல்
நீ சிரித்தாய்!
புரிந்தவனைப் புறந்தள்ளி
போகாதே !
சதி வலையில்
நமை வீழ்த்திய
சிறு நரிகள் முன் சென்று
நின்றிடுவோம் வா
மணமக்களாய்!