காதல் வந்தது
வருஷங்களை
கடன் கேட்கிறேன்
வாழும் நாட்களிடம்
அழகான பெண்ணை
மணமுடித்தேன்,
அற்புதமான
வாழ்நாட்களை வாழ
ஆரம்பித்தோம்,
என் காதலை பார்த்து
அந்த காதலே
கண் வைத்து விட்டது போல,
புற்று நோய்கள்
புலம் பெயர்ந்து
செல்லும்போது
என் காதல்
அதற்கும் பிடித்துவிட்டது போல ,
என்னை மனம்
முடித்து கொண்டது ...
பின்குறிப்பு : சென்னை அரசு மருத்துவமனையில் என் நண்பனை காண சென்ற போது புதிதாய் திருமணமான தம்பதிகள் கண்ணீரோடு பேசியது என் கைப்பேசியில் கவிதையாய் பதிவானது .