என்னுயிரே நீ நலமா

கவியில் மிதக்கும்
நிலாத்துண்டு - உன்
நெற்றி நலமா..?

வளைந்த என்னுலக
துருவம் - உன்
புருவம் நலமா..?

பார்வை வன்முறை
மீன்கள் - உன்
கண்கள் நலமா..?

என் வியர்வை நுகரும்
நுட்பம் - உன்
நுனி மூக்கு நலமா..?

ஈரப் புன்னகையின்
நகல் - உன்
செவ்விதழ் நலமா..?

தீண்டலில் என்னை
நனைத்த சாரல் - உன்
விரல் நலமா..?

என்னோடு அயராது
நடைபோடும் - உன்
கால்கள் நலமா..?

நீயில்லா இந்த
ஒரு மாசம்
என் வாழ்வின்
வனவாசம்

என் உயிரே நீ நலமா..?
என் உறவே நீ நலமா..?
என் கனவே நீ நலமா..?
என் கவியே நீ நலமா..?

எழுதியவர் : கோபி (8-Dec-14, 8:45 pm)
பார்வை : 569

மேலே