காமராஜர் ஆட்சி
‘காமராஜரின் ஆட்சி’ ‘காமராஜரின் ஆட்சி’ என்னும் பேச்சு இப்போது பரவலாக உள்ளது.
காமராஜரின் ஆட்சியை அமைக்க வேண்டுமானால் தமிழகத்தில் 234 MLA களில் 200 MLA ஆவது ஒரு கட்சிக்கு கிடைக்கவேண்டும். அவ்வளவு MLA ஒருகட்சிக்கு கிடைத்துவிட்டால் காமராஜர் ஆட்சி அமைத்துவிடலாமா? முடியாது! அதற்கு காமராஜர் வேண்டுமே! காமராஜர் மறுபிறப்பெடுத்து வரமுடியுமா? முடியாதென்றால் யாராவது காமராஜரைப்போல விளங்கலாம்!
யாராவது காமராஜரைப்போல விளங்கி, அவர் முதல்வராக இருந்து ஆட்சி அமைத்தால் அது காமராஜர் ஆட்சி.
காமராஜரின் பெருமைக்கு பெரிதும் காரணம் அவர் உருவாக்கி செயல்படுத்திய திட்டங்களா? அல்லது அவரது தேர்மையான ஊழலற்ற வாழ்க்கையா? என ஒரு கேள்வியை கேட்டால், காமராஜரின் புகழுக்கு பெரிதும் காரணம் அவரது நேர்மையான ஊழலற்ற வாழ்க்கையே என்பதுதான் சரியானபதில்.
வக்கீல் தொழிலுக்காக தென்னாப்பிரிக்கா சென்ற காந்திஜி, அங்கே நடைமுறையில் இருந்த தீன்டாமையை எதிர்த்து போராடினார். எத்தனையோபேர் போனார்கள் வந்தார்கள் பார்த்தார்கள் போராடவில்லை! காந்திஜி போராடி தென்னாப்பிரிக்க ஆங்கிலேய அரசை பணியவைத்தார். யாரும் செய்ய துணியாததை காந்திஜி செய்தார். எனவே அவர் மகாத்மா.
இந்தியாவில் விவசாயிகளின் உடையை பார்த்தார். தமிழ்நாட்டின் மதுரை மாவட்ட விவசாயிகளின் உடையைத்தான் ஒரே நாளில் தனது உடையாக மாற்றிக் கொண்டார் காந்திஜி. அவருக்கு சொத்து இருந்தது சுகமாக வாழும் வசதி இருந்தது அதையெல்லாம் துறந்து ஒரு ஏழை விவசாயியைப் போல வாழ்ந்தார் காந்திஜி. யாரும் செய்யாத புதுமையாக ‘சத்தியசோதனை’ என, உண்மையான சுய சரிதம் எழுதினார் காந்தி.
காந்தியைப்போல காமராஜர் நேர்மையாக வாழ்ந்தார். ஒன்பது ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்தவர் தனது அன்னையார் உள்ளிட்ட குடும்பத்தினரை தனது வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை.
அரசின் ஒரு சிறு சலுகை கூட தனது கடும்பத்திற்கு போய் சேரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
காமராஜர் முலமைச்சராக சென்னையில் இருந்தார். அவரது அன்னையார் அன்றைய நெல்லை மாவட்டம் விருதுநதரில் அவர்களின் குடிசைபோன்ற வீட்டில் வசித்து வந்தார். காமராஜரின் அன்னையாயிற்றே என சிந்தித்த அதிகாரிகளும் மந்திரிகளும் உத்தரவு பிற்ப்பித்து, குடிநீருக்காக ஒரு குழாயினை காமராஜரின் அன்னையார் குடியிருந்து வீட்டுக்கு இலவசமாக வழங்கிவிட்டனர்.
காமராஜர் நெல்லை மாவட்டம் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அன்னையை சந்திக்க சென்றார். குடிநீர் இணைப்பை பார்த்தார். எப்படி வந்தது என கேட்டார். அன்னையார் ‘எனக்கு தெரியாதப்பா, மந்திரி சோன்னாருன்னு; அரிகாரிகள்தான் கொண்டு வந்து போட்டாங்க’ என்றார் .
அதிகாரிகளையும் அமைச்சரையும் அழைத்து கண்டித்த முதலமைச்சர் காமராஜர் அந்த குடிநீர் இணைப்பை துண்டித்து, விடும்படி உத்தரவிட்டார். அவ்வாறு செய்யப்பட்டது.
“எல்லோரையும் போல தெருவுக்கு சென்று தண்ணீர் எடுத்துக்கொள் அம்மா. வீட்டுக்கு குடிநீர் இணைப்பு எடுக்கும் அளவுக்கு உன்மகன் சம்பாதிக்கவில்லை! உனக்கு எதாவது உதவி செய்துவிட்டு, அவன் ஏதாவது தப்பு செய்வான். நான் அந்த தப்பை தட்டிக்கேக்காம இருக்கனும்னு எதிர்பார்பான். அதனால தான் இதெல்லாம் வேண்டாம்னு சொல்றேன்” - இதுதான் காமராஜரின் வார்த்தைகள்,
இது அவருடைய நேர்மையை காட்டும் ஒரு சம்பவம். இப்படி பல உள்ளது.
அவர் வாடகை வீட்டில் இறந்த போது தி.மு.க ஆட்சி தமிழகத்தில் நடந்தது. அப்போது தி.மு.க அமைச்சர் ராஜாராம் என்பவர் காமராஜரின் உதவியாளரிடம் சொன்னார் “தலைவரின் உடலை ஊர்வலத்திற்காக எடுத்து செல்கிறோம். நீங்கள் வீட்டில் எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி பூட்டிக் கொள்ளுங்கள்” - என்று அதற்கு உதவியாளர் சொன்னார் “இங்கே பூட்டிவைப்பதற்கு எதுவும் இல்லை. பூட்டவேண்டிய அவசியம் இல்லை” - என்று.
முப்பது அல்லது முப்பத்தைந்து ரூபாய்கள் மட்டும் அவர் தலைவைத்து படுத்திருந்த தலையணைக்கு அடியில் இருந்தது. இதுதான் காமராஜரின் சொத்து.
இத்தகைய அவரது பன்புதான் காமராஜரின் பெருமைக்கு காரணம். நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு காசுகூட அரசு பணம் அரசியல்வாதியின் குடும்பத்தை நோக்கி நகரத்கூடாது.
அது அதிகாரிகள் மூலமாகவும் வரக்கூடாது ஒப்பந்தக்பாரர்கள் மூலமாகவும் வரக்கூடாது எந்த வகையிலும் வரக்கூடாது! - இதுதான் காமராஜர்.
இன்றைய அரசியலில் நான்தான் தாமராஜர், அவரைப்போல நடந்துகொள்வேன். நடந்து கொண்டிருக்கிறேன் என சொல்லிக் கொள்ளும் தகுதி உடையவர் யார்?
காமராஜரின் குடும்பம் வறுமையான குடும்பம். அதனால் அவருக்கு சொத்துகள் இல்லை. சொத்துகள் இருப்பவர்கள் முதல்வராக அமைச்சராக MLA ஆக வரக்கூடாதா? என்னும் கேள்வி நியாயமானது.
அரசியல் பதவி என்பது பொது வாழ்க்கையாகும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு குடும்பம் கூடாது. குடும்பம் இருந்தால். அதை துறக்க வேண்டும். குடும்பத்தில் இருந்து கொண்டே துறவிபோல் வாழ வேண்டும். அரசுக்கும் குடும்பத்திற்கும் தொடர்பு இருக்கக்கூடாது.
சொத்துக்கள் இருந்தால் அதை குடும்பத்தினருக்கோ மற்றவர்களுக்கோ எழுதிக் கொடுத்துவிட்டு ஒரு துறவியைப்போல அரசியலுக்கு வரவேண்டும். அப்படி வருகின்ற ஒருவர் காமராஜரைப் போல நடந்து காட்ட இயலும்.
அப்படி யாராவது முன்வருகிறார்களா? என்று பார்ப்போம்.
அப்படி யாராவது முன்வந்து அவரின் அந்த ஒரு காசுகூட குடும்பத்தின்பக்கம் நகரக்கூடாது என்னும் கொள்கையினை மனப்பூர்வமாக ஏற்றவர்கள் MLA ஆக 200 க்கும் மேல் வெற்றிப் பெற்றால் காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் அமைக்கலாம்.
காமராஜர் ஆட்சியின் இந்த மையக்கருத்தை விட்டுவிட்டு இன்று பலரும் ‘காமராஜர் ஆட்சி’ என்று விவாதம் செய்கிறார்கள்.
காமராஜர் ஆட்சி என்பது திட்டங்களால் மட்டுமல்ல, நேர்மையால் ஊழலற்ற தன்மையால். நேர்மையும் ஊழலற்ற தன்மையும் இல்லாமல் காமராஜர் நடைமுறைப்படுத்தியதைப் போல திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது.
காமராஜர் என்பது நேர்மையும் ஊழலற்ற தன்மையும் கடின உழைப்பும் தேசபத்தியும் ஆகும்!