அரசியல் அரசியல்வாதிக்காக அல்ல அரசியல் நாட்டுக்காக

என்னுடைய நன்பர் ஒருவர் ஒரு தேசிய கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்து செயல்பட்டுக்கொண்டிருந்தார். அவர் ஒரு வழக்கறிஞர். விவரம் தெரிந்தவர். திடீரென கட்சியை விட்டு விலகி தி.மு.க வில் சேர்ந்துவிட்டார். நான் ஏன் இப்படி செய்துவிட்டீர்கள்• என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்தான் முக்கியமானது. அந்தபதில் என்னை ஆட்சரியத்தில் ஆழ்த்தியது.
அவர் சொன்ன பதில்- “அ.தி.மு.கவுக்கும் மனுபோட்டிருந்தேன் தி.மு.க வுக்கும் மனு போட்டிருந்தேன். காத்திருந்து காத்திருந்து பார்தேன் அந்த அம்மாவிடமிருந்து பதிலே வரவில்லை. தி.மு.க வில் சேர்ந்துவிட்டேன்” - என்பதுதான்.
இப்போது தொலைகாட்சிகளில் தோன்றி அ.தி.மு.க வை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். அன்று அ.தி.மு.க விலிருந்து அழைப்பு வந்திருந்தால்; இன்நேரம் தி.மு.க வை விமர்சனம் செய்து கொண்டிருப்பார்.
சமீபத்தில் காங்கிரசில் சேர்ந்த நடிகை சொல்லியதாக ஒரு செய்தி வந்துள்ளது. அது என்னவென்றால் – “பா.ஜ.க ஒன்றும் தீண்டதகாத கட்சியல்ல. ஆனால் அது வெற்றியடைந்துள்ளது. எனவே அங்கு எனக்கு முக்கியத்துவம் அதிகமாக கிடைக்காது. எனவே அதை தான் விரும்பவில்லை. காங்கிரஸ் இப்போது தோல்வியடைந்துள்ளது. எனவே அங்கு முக்கியத்துவம் அதிகம் கிடைக்கும். எனவே காங்கிரசில் சேர்ந்தேன்” - என்பதாகும்.
ஒரு ஊரில் ஒரு பிரச்சினை நடக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்த பிரச்சினை காரணமாக அந்த ஊர் மக்களே இரண்டாக பிரிந்து விட்டார்கள். சிலருக்கு ஒரு தரப்பினரிடம் நியாயம் இருப்பது போல் தோன்றுகிறது. சிலருக்கு இன்னொரு தரப்பினரிடம் நியாயம் இருப்பதுபோல் தோன்றுகிறது. இரண்டு தரபினரும் நல்லவர்கள் தான். அவர்களின் மனசாட்சி சொல்வதை அவர்கள் நியாயம் என்கிறார்கள். இந்த விசயத்தை கேள்விப்படும் அந்த ஊரை சார்ந்த ஒவ்வொருவரும் அவரவர் மனசாட்சி சொன்னபடி இந்தபக்கம் அல்லது அந்தபக்கம் சேர்ந்து கொள்கிறார்கள்.
அந்த ஊரில் ஆசிரியர்கள், பொறியாளர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள், இதர பணிசெய்வோர் என பலதரப்பட்ட மக்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் அவரலர் மனசாட்சி சொன்னபடி இந்தபக்கம் அல்லது அந்தபக்கம் என சேர்ந்து தனது கருத்தை தெரிவிக்கிறார்கள்.
அந்த ஊரில் உள்ள ஒரு சில வழக்கறிஞர்கள் மட்டும் என்ன சொல்கிறார்கள் என்றால் – “எனக்கு மனசாட்சி இல்லை! யார் எனக்கு நன்மை செய்கிறார்களோ, பணம் தருகிறார்களோ, அவர்களின் பக்கம் நான் சேர்ந்து கொள்கிறேன்” - என்று.
அந்த ஊரில் உள்ள சில ரவுடிகளும், மதுவின் காரணமாக மதிகெட்டுப் போனவர்களும், பணம் கொடுத்தால் எதையும் செய்ய தயாராக இருப்பவர்களும் என்ன சொல்கிறார்கள் என்றால் – “எங்களுக்கு யார் அதிக பணம் தருவார்களோ அவர்களின் பக்கம் நாங்கள் நிர்போம்” – என்று.
இந்த வளக்கறிஞர்களைப்போல ரவுடிகளைப்போல, மதுவால் மனம் கெட்டுப்போனவர்களைப்போல, அடியாட்களைப்போலத்தான் இன்று பெரும்பாலான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
என்னுடைய நன்பரும் சரி இந்த நடிகையும் சரி எந்த கட்சியில் உழைக்க வேண்டும் என்பதை தனக்குகிடைக்கும் முக்யத்துவம், விளம்பரம், பணம் ஆகியவற்றை வைத்துதான் முடிவு செய்கிறார்கள். நாட்டில் நலனை வைத்து முடிவு செய்யவில்லை.
என் நன்பரைப்போன்ற இந்த நடிகையைப்போன்ற அரசியல்வாதிகள்தான் அதிகமாக உள்ளனர். பலர் இத்தகைய நோக்கத்திற்காகவே புதிது புதிதாக கட்சிகளை துவக்குகிறார்கள்.
இத்தகைய அரசியல் வியாபாரிகளைத்தான் இன்று பத்திரிக்கைகளும் தொலைகாட்சி நிறுவனங்களும் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பத்திரிக்கைகளும் தொலைகாட்சிகளும் இதை வியாபாரமாக செய்கிறார்கள்.
போலி அரசியல்வாதிகள்! போலியானவர்களின் அறிக்கைகளை தலைப்பு செய்திகளாக்கி தரும் செய்தி நிறுவனங்கள்! போலிகளின் விளம்பரங்கள்!
இத்தனைக்கும் மத்தியில் உண்மையை கண்டறிவது சாதாரண மனிதனுக்கு இயலாத காரியமாக இருக்கிறது.
எனவேதான் போலிகள் MLA வாக, MP ஆக, நகராட்சி – ஊராட்சி – மாநகராட்சி – தலைவர்களாக, முதல்வர்களாக, பிரதமர்களாக பொறுப்புக்கு வந்துவிடுகிறார்கள். ஏன் ஜனாதிபதியாகவும் வந்து விடுகிறார்கள்.
போலிகளை வைத்துக்கொண்டு முன்னேற்றம் கான்பது அரிய செயலாகும். எனவே போலியற்ற அரசியலை நாம் உருவாக்க வேண்டும். போலிகள் எந்த கட்சியில் இருந்தாலும் நாம் புறக்கணிக்க வேண்டும்!
அரசியல் என்பது
அரசியல்வாதிக்காக அல்ல!
அரசியல் என்பது
நாட்டுக்காக!

எழுதியவர் : குமரிகிருஷ்ணன் (10-Dec-14, 11:41 am)
சேர்த்தது : குமரிகிருஷ்ணன்
பார்வை : 108

மேலே