எனது பார்வையில் திருக்குறள்
‘கல்லைக் கண்டால் நாயை காணோம்
நாயைக் கண்டால் கல்லை காணோம்’
-- இது ஒரு சொல்லாடால்.
ஒரு கல்லிலே நாய் வடிவம் செதுக்கப் பட்டிருக்கிறது. நாய் வடிவை ரசித்து அதை நாயாக பார்கும்போது நாயாக உருவாகியிருக்கும் கல் நமது கண்களுக்கும் கருத்துக்கம் தென்படுவதில்லை. அதேவடிவத்தை கல்லாகவே பார்தோமானால் நம் கண்களுக்கும் கருத்துக்கும் நாய் தெரிவதில்லை. கல் தான் தெரியும். இது அந்த சொல்லாடலின் பொருள்.
ஒன்றிலிருந்து நாம் புரிந்து கொள்ளும் பொருள் என்பது அதைநாம் எப்படி அணுகுகிறோம் என்பதை பொறுத்திருக்கிறது. என்பதை விளக்குவதற்காக இந்த சொல்லாடல். இதை பழமொழி எனனும் சொல்லலாம்.
இதே சொல்லாடலுக்கு இன்னொரு பொருளும் கூறுவர். அது என்னவென்றால் --- “நாயை கண்டால் அதை அடிப்பதற்கு கல்லை தேடினால் கல் கண்களில் படவில்லை. கல் கிடைக்கவில்லை. கல் கிடைத்தபோது அடிக்கலாம் என்று பார்த்தால் நாய் ஓடிவிட்டது. அதை காணவில்லை”. --- என்பதாகும்.
‘வாய்ப்பு கிடைக்கும் போது அதை பயன்படுத்திக்கொள்ள இதர உபகரணங்கள் கிடைக்கவில்லை. உபகரணங்களை பக்கதுணைகளை தேவையானவற்றை தேடிக்கொண்டபின்பு வாய்ப்பை பயன்படுத்தலாம் என்று முற்பட்டால் வாய்ப்பு நழுவிபோய் விட்டது’ -- என்னும் ஒரு நிலைப்பாட்டை விளக்குவதற்காக அந்த சொல்லாடலை பயன்படுத்துவர்.
ஓரே பழமொழி இரண்டு விதமாக பார்க்கப்படுகிறது. இதில் நாம் எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்னும் கேள்வியை என்முன் வைத்தால் நான் முதலில் சொல்லப்பட்டதைத்தான் எடுத்துக் கொள்வேன்.
ஒவ்வொரு பொருளின் மீதும் சொற்றொடரின்மீதும் கருத்தின்மீதும் நமது பார்வைகள் மாறுபடுகின்றன. இந்நிலையில் திருவள்ளுவரை உள்ளதுஉள்ளபடி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. . இந்த வகையில் “எனது பார்வையில் திருக்குறள்”. எனநான் சிந்திக்க துவங்குகிறேன்!
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பகவன் என்னும் சொல் இறைவனை குறிப்பதாகும். பகம் என்பது ஆறுவகையான மேலான குனங்களின் தொகுப்பை குறிப்பது. எல்லையற்ற ஞானம், எல்லையற்ற பலம், எல்லையற்ற ஐஸ்வரியம், எல்லையற்ற வீரியம், எல்லையற்ற ஆதாரசக்தி, எல்லையற்ற தேஜஸ். இந்த ஆறும் உடையவன் பகவன். கீதை என்னும் சொல்லின் பொருள் உபதேசம் என்பதாகும் ‘பகவத்கீதை’ என்றால் ‘பகவனின் உபதேசம்’ என்பது பொருள். இறைவனின் உபதேசம்.
பகவன் என்பது பகவான் என திரித்து சொல்லப்படுகிறது. குருபகவான், வாயு பகவான், சனி பகவான், பகவான் கிருஷ்ணர், கல்கி பகவான், சுக்ர பகவான், பகவான் ரமணர், புத்த பகவான், பகவான் ஸ்ரீ சத்ய சாயி, இப்படியாக கடவுளின் பிரதிபலிப்பாக பார்க்கப்படும் அனைத்தையும் நாம் பகவான் என்கிறோம்.
ஆக, பகவன் என்றால் இறைவன். ஆதிபகவன் என்றால் எல்லாவற்றிற்கும் முற்பட்ட இறைவன் என்பது பொருள்.
இறைவன் சிவன் பிரம்மா விஷ்னு என மும்மூர்திகளாகவும் அவர்தம் சக்தியர்களாகவும் விளங்குவதாக வேதம் சொல்கிறது. சிவன் பிரம்மா விஷ்னுவுக்கும் முற்பட்ட இறைவனை வள்ளுவர் ஆதிபகவன் என்கிறார். சிவன் பிரம்மா விஷ்னு மற்றும் அவர்தம் சக்தியர் இன்னும் எண்ணற்ற ரூபங்களில் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் அறிவுக்கு எட்டியுட் எட்டாமலும் விளங்குகிறான் இறைவன் இவை அனைத்துக்கம் மூலமாக விளங்கக்கூடிய இறைவனின்நிலையைத்தான் திருவள்ளுவர் ஆதிபகவன் என்ற குறிப்பிடுகிறார்.
‘அகரம்’ என்றால் அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ. எனும் பன்னிரண்டு தமிழ் எழுத்துகளும் என்பது பொருளாகும்.
இந்த ‘அகர எழுத்துகளை மூலப் பொருளாக வைத்துதான் தமிழின் அனைத்து எழுத்துகளும் இயங்குகின்றன அல்லது உள்ளன. அதுபோல இறைவனை மூலப்பொருளாக வைத்துதான் உலகம் உள்ளது, இங்ச்ச்ச்ச்குகிறது’.
--- இதுதான் இந்த திருக்குறளின் பொருளாகம்.
அகர எழுத்துகள் பன்னிரண்டில் எதாவது ஒரு எழுத்தின் துணை இல்லாமல் தமிழில் உள்ள ஏனைய ஏழுத்துகளான மெய் எழுத்துகள் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் இவற்றில் எந்த ஒரு எழுத்தையும் நாம் உச்சரிக்க முடியாது. (முயன்று பாருங்கள்) ‘க்’ என்பதை ‘இ’ இல்லாமல் சொல்ல முடியாது. ‘மெ’ என்பதை ‘எ’ இல்லாமல் சொல்ல முடியாது. அகரம் இல்லையென்றால் வேறு எந்த எழுத்தும் இல்லை. அனைத்திற்கும் அகரமே அடிப்படை என்பதைப்போல உலகிற்கு இறைவன் அடிப்படை. இறைவன் இன்றி உலகமோ உலகின் செயல்பாடுகளோ உயிரினங்களின் செயல்பாடுகளோ இல்லை என்பதுதான் வள்ளுவரின் முதல் குறளின் பொருளாகும்.
அவனின்றி அணுவும் அசையாது
எல்லாம் அவன் செயல்.
இறைவனே அனைத்துமாக இருக்கிறான்.
நமக்கொரு சுதந்திரத்தை இறைவன் கொடுத்துள்ளான் அதைக் கொண்டு அவனை தொழுது நல்லறம் செய்து வாழ வேண்டும். நம்மை கண்காணிக்க நமக்க உதவிட அவன் நம்முடனே இருக்கிறான்.
இரு பொன்ற இந்து சமய கருத்துகளை ஒரு எடுத்துக்காட்டுடன் முதல் பாடலில் விளக்கியுள்ளார் திருவள்ளுவர்.