பாரதமும் தமிழகமும்

மவுனமாக கிடந்தது பாரதம்!
மண்டியிட்டு கிடந்தது!
மன்மோகன் சிங்குக்கு பேசத்தெரியாது!
பார்த்துதான் படிக்கவேண்டும்!
அதுவும் சோனியா எழுதிக் கொடுத்ததை!
எவ்வளவு சிரமம் அவருக்கு!
ராஜாவும் அவரும் சிரமம்பட்டு 2G வழக்கை சமாளிக்கிறார்கள்!
சாமர்திதியமாக என்னையும் காப்பாற்றினீர்கள் எனசொல்லி ராஜாவின் தோழில் தட்டிக்கொடுத்தார் மன்மோகன்சிங்!
பிரதமர் மன்மோகன்சிங்கை நிலக்கரி ஊழல் தொடர்பாக விசாரிக்கக் கூடாது என்று நிர்பந்தம் இருந்ததாக இப்போது சி.பி.ஐ சொல்கிறது.
பத்து ஆண்டுகாலத்தை எப்படியோ ஓட்டிவிட்டார் மன்மோகன் சிங். சோனியா பிரதமராக முடியாது என்று ஜனாதிபதி அப்துல்கலாம் சொல்லி விட்டதால் மன்மோகன்சிங்குக்கு யோகம் அடித்தது.
சோனியாவின் சொல்படி நடந்து ஒரு முன்மாதிரியாக விளங்கினார் அவர். இப்போது இங்கே பன்னீர்செல்வம். இவர் தமிழகத்தின் மன்மோகன். அவர் பிரதமர். இவர்முதல்வர்.
அங்கே காங்கிரசின் சோனியா, இங்கு அ.தி.மு.கவின் ஜெயலலிதா இரண்டு பக்கமும் ஜனநாயகன் இல்லை. எல்லாம் ஒன்மேன் ஆர்மிதான். அம்மா இன்றி அணுவும் அசையாது. காங்கிரஸ் தொண்டர்களுக்கும் சரி அ.தி.மு.க தொண்டர்களுக்கும் சரி. அம்மாதன் எல்லாம். இவர்களெல்லாம் ஜீரோ தான். அம்மா தான் ஹீரோ! ஜனநாயகமாவது மண்ணாங்கட்டியாவது இவர்களைப் பொறுத்த மட்டில் இரண்டுமே ஒன்றுதான் நாடாவது சுடு காடாவது அவர்களுக்கு இரண்டுமே ஒன்றுதான்! அம்மாதான் எல்லாம்.
டேல்லி அம்மாவிடம் சில பிள்ளைகள் சண்டைப்போட்டு வெளியேறுகின்றன! சுதந்திரகாற்றை சுவாசிக்கின்றன! தனியாக கூடு கட்டி வாழ்கின்றன.
ஆனால் இங்கே அனைத்து தொண்டர்களும் குருடர்கள். ஊனமுற்றவர்கள். இவர்களால் விலகிப்போக முடியாது. முந்தானை தலைப்போடு தங்கனை இணைத்துக் கொண்டவர்கள் இவர்கள். இவர்கள் சிந்தனைக்கு சீல் வைத்தவர்கள். இவர்களின் சிந்தனையெல்லாம் அம்மாதான். இவர்களைப் பொறுத்தமட்டில் மற்றவையெல்லாம் சும்மாதான்.
ஆனால் இந்திய அரசைவிட்டு அந்த அம்மாவும் அவரது கன்றும் மன்மோகனும் விரட்டப்பட்டுவிட்டார்கள்.
எழுச்சி நாயகனாக நரேந்திர மோடி! விவேகானந்தருக்கு கூட அவரின் தாய் தந்தையர் ‘நரேந்திரன்’ என்றுதான் பெயல் கூட்டினார்கள். அதே நரேந்திரன் தான் அவர் ஆன்மீகத்தில்! இவர் அரசியலில்.
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!
வானமே எல்லை!
அண்டை நாடுகள் மட்டுமல்ல உலக நாடுகளே வியந்து பார்க்கின்றன.
முதலீடு! வளர்ச்சி! ஆரோக்கியம்!
திட்டம் செயல்பாடு!
முன்னேற்றம் முற்போக்கு சிந்தனை…… ஊழல் இல்லை ஒளிவு மறைவு இல்லை!
MPகளின் சொத்து கணக்குக்கு கூட 48 மணி நேர கெடு!
ஒவ்வொரு கிராமமாக தத்தெடுப்பு!
ஒவ்வொருவருக்கும் ஆயுள் காப்பீடு! விபத்து காப்பீடு!
ஒவ்வொருவரின் வளர்ச்சி முதலீடாக ரூபாய் 5000.
கறுப்பு பணம் மீட்டெடுப்பு!
அதிவேக ரயில்கள்!
ஸ்மார்ட் சிட்டிகள்!
நதிகள் இணைப்பு!
சேது சமுத்திர திட்டம்!
இரும்பு மனிதர் பட்டேலுக்கு மரியாதை!
மதிய உணவு தந்த காமராஜருக்கு மரியாதை!
பாக்கிஸ்தானுக்கு எச்சரிக்கை!
சைனாவிடம் சாதுர்ரியம்!
இலங்கையிடம் நிர்பந்தம்!
பயங்கரவாத சூழலில் செவிலியர் விடுவிப்பு!
மீனவர் விடுதலை!
ராணுவம் மேம்படுத்தப்படுகிறது.
விலைவாசி குறைகிறது!
பொருளாதாரம் மேம்படுகிறது.
இது ஒரு துவக்கம்தான்---
துவக்கமே ஜொலிக்கிறது!
பாரத மாதா மீண்டும் ஒளிவீச துவங்குகிறாள்!
பாரதமாதாவின் வதனத்தில் திலகமாக
விளங்கம் தமிழகத்தில்--?
அடிமைகளின் ஒப்பாரி கேட்டுக் கொண்டிருக்கிறது.
இங்கு அ.தி.மு.க அகற்றப்பட வேண்டும். மாற்று தி.மு.க அல்ல! தேசிய பா.ஜ.க வே மாற்று!
மதுவை ஒளித்து
பெண்கனை காப்போம்!
மதுவில்லா குஜராத்போல
தமிழகம் மாறட்டும்
மின்தடை இல்லாத மானிலம் ஆகட்டும் தொழில் வளம் கூடட்டும்.
இங்கு நதிகளை இணைப்போம்!
நீர்நிலைகளை ஆளப்படுத்தி பராமரிப்போம்!
தமிழகத்தை சுத்தப்படுத்துவோம்!
இனாம் அரசியலை துடைத்தெறிவோம்!
எல்லோரையும் செல்வந்தராக்குவோம்!
தமிழை ஆட்சி மொழியாக்கவோம்!
தமிழரின் வாழ்வில் ஒளி யேற்றுவோம்.
அப்படியானால் மோடியின் ஆட்சி இங்கேயும் வேண்டும்!
ஒரு சுத்தத் தமிழன் இங்கே முதல்வராக வேண்டும்.
தமிழகம் சுத்தப்பட வேண்டும்.
தமிழோசை உலகெங்கம் ஒலிக்கவேண்டும்.
சோனியாபோல ஜெயலலிதாவும் தூக்கியெறியப்பட வேண்டும்!

எழுதியவர் : குமரிகிருஷ்ணன் (10-Dec-14, 12:03 pm)
சேர்த்தது : குமரிகிருஷ்ணன்
பார்வை : 315

மேலே