நல்ல செயல்

ஐந்தறிவு
ஜீவனுக்கும்
அவனின்
அடாவடிகள்
பிடிக்கவில்லைப்
போலும்.....அட
கிழித்துப்
போடும்
அழகைப்
பாரும்......!

கட்டவுட்டும்
காணாமல்
போச்சு.....கட்டவிழ்த்து
விட்ட
மாடுகளால்....!

கொன்றால்
பாவம்
தின்றால்
போச்சு.....என்பது
இதுவென்று
ஆகிப்
போனதோ...?

தேர்தல்
வந்த
மகிழ்ச்சியில்
அரசியல்
அழுக்கர்கள்
மட்டும்
அல்ல சந்தோஷத்தில்.....
தெருவோர
ஆடு மாடுகளும்
தான்.....!!

சூடு பிடிக்கும்
தேர்தல்
களத்தில்
மாடு பிடிக்க
எவன் வரப்போறான்?
அச்சமின்றி
நீயும்
தின்று போ.....ஆனாலும்
இலங்கையில்
ஆமி
வந்தாலும்
வருவான்.....உன்
உரிமைக்காரன்
ஐசி கேட்டு......!

(ஐசி - அடையாள அட்டை)

எழுதியவர் : thampu (11-Dec-14, 5:58 am)
Tanglish : nalla seyal
பார்வை : 298

சிறந்த நகைச்சுவைகள்

மேலே