வர வேண்டும்மீண்டும்

வீரியமற்று தமிழ் மண்ணில் விழுந்த விதையே..
பாரதியின் கவிதை மழையை வாங்கிக் கொள்...
வீரமும் விவேகமும் மண்ணாலும் மழையாலும்
விருட்சமாகும் விந்தை நீ காண்பாய்!

கீதையின் விளக்கம் கேட்டுப் பார் பல பண்டிதரை ..
பாரதி போல் எவரும் சொல்லியதில்லை!
போரிட வைக்கும் நூல் என்று நம்பும் பூமிக்கு
அரியதோர் உண்மை சொன்னவன் பாரதி..கீதை
கௌரவரை குரோத புத்தியாகவும்
விஜயனை ஜீவாத்மாவாகவும்
கண்ணனை பரமாத்மாகவும்
மனிதன் அழித்திட வேண்டியது எதை
என்பதை
அழகுபட சொல்வதே கீதை என்றவன் பாரதி..

..
காலனி ஆதிக்கம் செய்ய வந்த-வெள்ளைப்
பறங்கியர் கொடுமை தன்னை எளிதாய்
மீறிடும் பல கொடுமை நடக்குதிங்கு !-இதைக்
காணவும் இல்லையே பாரதி நம்மிடம் இன்று !

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
துணிவுடன் பாரதி போல்
மனிதரும் இருக்கின்றார்- அவர்
பேச்சை யார் மதிக்கின்றார்?

அவனுக்கு காளியும் கண்ணனும் ஒன்று
பல சாதியும் சமயமும் ஒன்று
வரவேண்டும் மீண்டும் அவன் இன்று-வந்தால்
நொந்திடுவான் நம் மக்கள் நிலை கண்டு!

..
அதனால்..
சொந்த மண்ணிலேயே
தமிழரென பெருமை கொள்ளா
நிலையுடையோர் தமை உயர்த்த
பாரதி ! நீ மீண்டும் வர வேண்டும்!

எழுதியவர் : கருணா (11-Dec-14, 3:38 pm)
பார்வை : 377

மேலே