பாரதியும் நானும்

எங்கெங்கும் தேடினேன்
பாரதியே!
உன்னை...
இந்த யுகத்தில்!..
யாருமே இல்லை
உன் போல்!...

ஒரு வேளை
நான் பார்க்கும்
பார்வை தான்
தவறோ?
இன்றைய பாரதிகளின்
அடையாளம் தான்
வேறோ?

மாதவராய் பிறப்பதற்கே
நல்ல மாதவம்
செய்திட வேண்டுமம்மா!
பாடினாய் நீ!
இன்றோ ?
நாங்கள் சமஉரிமை(50%)
கூட கேட்கவில்லை!
33% தருவதற்கே
எதோ அவன்
அப்பன் வீட்டு
சொத்தை...
வாரி தருவது
போல் -சம
உரிமையை பந்தாடுகிறான்....

தவறு தவறு
சமஉரிமை அல்ல...
மூன்றில் ஒரு பங்கே...

இன்றைய பாரதிகளே!
உங்களுக்கு உங்களின்
சமஉரிமை மறுக்கப்பட்டிருக்கிறதா?
மறுக்கப்படும்போது தான்
எங்களின் நியாயக்குரல்
ஒலிக்கும் உங்கள் செவிகளில்!....

பாரதியே கீழே வாரும்...
உரிமையை மீட்டு தாரும்...

ரௌத்திரம் பழகு
என்று ஆவேசப்பட்டாய்....
இன்றோ நாங்கள்!..
தன்மானத்தையே...
விற்று தீர்த்துவிட்டோம்.
நாங்கள் கோபபட்டால் நாடு என்னாவது!.. (முன்னேறி விடுமல்லவா...)

புதுமைப்பெண்ணுடன்
உறவாடிய
பாரதியே!
இன்று புதுமைப்பெண்கள்
உண்டு.
பாரதிகள் தான்
எங்கு?

தமிழோடு உறவாடிய நீ!
ரௌத்திரம் பழகிய நீ!
புதுமைப்பெண்ணை உருவாக்கிய நீ!
தன்மானத்தை தடம்பதித்த நீ!
காலனுக்கும் இவைகளை
கற்றுச்சொல்ல சென்றாயோ!
இல்லை இந்த நரன்களின்
சதிச்செயலை கண்டு சென்றாயோ!

காலனுக்கும் உன்மேல்
காதல் போலும்!
அதனால் தான் என்னவோ?
காலாவதி ஆகா உன்னை
கடத்தி சென்றானோ?

கவிதைகளில் தமிழை
உலகுக்கு சுவாசமாக்கிவிட்டு...
சுவாசத்தை நிறுத்திவிட்டாயே.?..
உன் கவிதையில் இருந்த
கர்வத்தை கண்டு...
வெள்ளையனும் வெளியேறிவிட்டான்
என்பதை அறிவாயோ?
நீ அறிந்திருப்பாய்.
சுதந்திரத்தை
முதலில்
உன் கவியில்
தானே களித்தோம்...

நீ பிறந்த மண்ணில் தான்
நானும் பிறந்தேன்!
என்பதை
கர்வத்துடன்
கூறுவேன்...

பெரிதினும் பெரிது கேள்
என்றாய்!
நானும் கேட்கிறேன்...
தமிழாய் என் எண்ணத்தில்
எப்பொழுதும்
வாழ்வாயா!

பதினொன்றிலே பிறந்து....
பதினொன்றிலே மாயம்
ஆனது ஏனோ?
ஆதியும் அந்தமும் ஒன்றே!
அதுவும் பராசக்தியே!
என்று உணர்த்திடவே...

நீ இருந்திருந்தால்
தமிழுக்கு
கண்ணம்மா காவியம்
வாயிலாக...
தங்க மீன்கள்
கிடைத்திருக்கும்...



தமிழ் வாழும் வரை...
உன் கவி
எட்டுத்திக்கிலும்!
காற்றோடு காற்றாய்...
கலந்து
தமிழனின் மூச்சுகாற்றாய்...
எப்பொழுதும் ...
உலா வரும்...
ஒவ்வொரு தமிழனின்
எண்ணத்திலும்...
நீ என்றும் வாழ்ந்திருப்பாய்....
என் ஆசானே...
உமக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (11-Dec-14, 8:06 pm)
Tanglish : baarathaiyum naanum
பார்வை : 318

மேலே