ஆண்மை பெண்மை
ஆலமரம் என்று சொல்லவா
அதன் நிழல் போல் அல்லவா
உன் அன்பிற்கு உவமேயம்
யோசித்து தான் சொல்லவா
இளம்தென்றல் என்று சொல்லவா
புத்துணர்வின் முகவரி அல்லவா
உன் பரிவிற்கு உவமேயம்
யோசித்து தான் சொல்லவா
புல்லின் மேல் பனித்துளி அல்லவா
பாதத்துடன் பேசுவதை சொல்லவா
உன் பாசத்தின் உவமேயம்
யாசித்து நான் கொள்ளவா
சிட்டுகுருவி சிறகடிக்க சொல்லவா
உற்சாகத்தின் முகவரி அல்லவா
உன் நட்ப்பின் உவமேயம்
யாசித்து நான் கொள்ளவா
பெற்ற தாயோ
உற்ற சகோதரியோ
பற்றிய மனையாளோ
சித்திர மகளோ
விசித்திர தோழியோ
பெண்மையின்
குளிர் சூழல்
ஆண்மையின்
ஆதார நிழல்