என் காதல் உனக்கு கனவாகத்தான் தோன்றும் 555

என்னவளே...

நீ என்னைவிட்டு
பிரிந்த நாள் முதல்...

நான் தனிமையை
ரசிக்க தொடங்கிவிட்டேன்...

உன்னுடன் இருந்த
சில நினைவுகள்...

வந்து போகிறது
என்னுள்...

அன்றொருநாள் நீ என்
கைகோர்த்து என்னருகில் அமர்ந்தது...

எனக்கு மட்டும் கேட்கும்
உன் சிரிப்புகள்...

என் எதிரே வந்து செல்லும்
உன் விழிகள்...

அன்போடு நீ என்னை
அழைக்கும் சப்தங்கள்...

நீ செல்லமாக திட்டும்
வார்த்தைகள்...

எப்போதும் சங்கீதம் பாடும்
உன் கொலுசின் சப்த்தங்கள்...

எல்லாம் தினம் தினம்
வந்து செல்கிறது என்னுள்...

இன்னும் சில நாட்களில்
எல்லாம் பழகிவிடும்...

அன்று நீ நிஜத்தில்
என்முன் வந்தாலும் கூட...

கனவாகத்தான்
தோன்றும் கண்ணே...

என் காதலையும் நாம்
பழகிய நினைவுகளையும்...

கனவாக நினைத்து
மறக்க சொல்லிவிட்டாய்...

நிஜமான என் காதல்
உனக்கு கனவாக...

கனவான உன்
நினைவுகள் மட்டும்...

நிஜமாக என்றும்
என்னுடன் இருக்கும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (11-Dec-14, 8:27 pm)
பார்வை : 930

மேலே