ஒரு வருட காதல்

மீன் குழம்பு
பிடிக்குமுன்னு
மத்தியான வெயிலு கூட
பாராம அலைஞ்சு திருஞ்சு
வாங்கியாந்தா
பிடிக்கலேன்னு
சட்டுனு
சொன்னியே,
ஏன் கவலைய
இருக்கனுன்னு
கேட்டதுக்கு
ஓ .............
னு அழுதியே
நீ அழுதத
என் கண்ணு பாக்க
என்ன அறியாம
அழுத்துசே
சொல்லிடு தான்
அழுவேண்டி,

எங்க வீட்டுல
எனக்கு,,,,,,,

ஒரு நிமிஷம்
நிறுத்து

இன்னையோட
நம்ம காதலிச்சு
ஒரு வருஷமாச்சு,

இந்த பூ வ
முதல் வங்கிக

நான் போயிட்டு வரேன்
இனிமேல் வர மாட்டேன்

எழுதியவர் : ரிச்சர்ட் (10-Dec-14, 9:23 pm)
Tanglish : oru varuda kaadhal
பார்வை : 377

மேலே