அரிதார காதல்
என் கண்ணிலே
தூசி பற்றினாயா இல்லை
ஊசி கொண்டு குற்றினாயா?
என் பேச்சிலே
நகைத்து ரசித்தாயா இல்லை
சிரித்து என்னை பழித்தாயா?
என் தீண்டலை
உணர மறுத்தாயா இல்லை
உணர்ச்சி அற்று நடித்தாயா?
என் பிடியிலே
கைநழுவி விட்டாயா இல்லை
கைகழுவி சென்று விட்டாயா?
உன் பதிலிலே
மனதை உடைத்தாயா இல்லை
மடிந்து விடத்தான் உரைத்தாயா?
என் உயிரினை
உண்மையாய் காதலித்தாயா இல்லை
கண்மையாய் பொய்வண்ணம் தெளித்தாயா?