உண்மை காதலன்
நீர் தேடி அலையும் பாலைவனத்தில்
தோன்றிய கானல் நீர் மறைவது போல
உன்னை தேடும் போது தொலைவில் தெரிகிறாய்
ஆனால் தொடும் போது தொலைந்து போகிறாய் ஏனடி ?
இலையின் மேல் இருக்கும் ஒட்டாத நீர் துளிபோல்
என் அருகில் இருந்தே பிரிந்து சென்றாயே .....
இதயம் எனும் பூ தீப்பிடித்து அதில் கனவுகள்
எனும் இதழ்கள் எரிந்தது போனது ஏனோ ?...
ஓர் நொடி நீ பிரிந்ததற்கே
பலநொடிகள் நான் கலங்கிவிட்டேன்...
உனை பிரிகையில் உயிரிழக்கிறேன்
ஓடும் நீரிலே என் உயிரை புதைகிறேன்....
போகிறேன் என்று சொல்லி விட்டாய்...
எளிதாக என் உள்ளத்தை கொன்று விட்டாய்!!..
இறந்த இதயத்தின் வாயிலாக சொல்கிறேன்
"பத்திரமாக போ!!.... "- காரணம்
உன் பிரிவிலும் என் பரிவுண்டு
ஒரு உண்மை காதலனாய் இருப்பதினால்!! ...