அழகியே ,

நான் மிக ரசித்த youngistan (ஹிந்தி) பட பாடல் sangaemarmar இன் தமிழாக்கம்
என் தமிழ் நண்பர்களும் ரசிக்க :
(காட்சிப் பின்னணி தாஜ் மஹால் ):
கேட்பாயே அன்பே ..........,
இந்த பளிங்கின் மேனாராக்கள் (கோபுரம்)
ஒன்றுமில்லை
உன் அழகின் முன்னால்
என் மனதின் ஆட்சியும் இன்றுமுதல்
உன்னுடையது
இதோ உன் கிரீடம் ............................,
நீ இல்லாமல் என் இதயம்
மெதுவாய் துடிக்க
உன்னை காணும் நேரம்
உன்
மேலாடையுடன் கட்டப்பட்டு
என் மனமும்
வானில் பறக்கிறது ................,
கேட்பாயே அழகே .............,
வானின் விண்மீன்கள்
ஒன்றுமில்லை
உன் அழகின் முன்னால்
என் மனதின் ஆட்சி இன்று முதல்
உன்னுடையது .....,
இதோ உன் கிரீடம் ..............,
உன் தூக்கத்தின் வழியாக
சென்ற என் கனவுகள்
சொல்கிறது
நாம் பகலாய் மாற்றிய அந்த இரவுகள்
இன்று உண்மையாகிவிட்டன
கேட்பாயே என் அழகே
இந்த ஈருலகின் (கனவுலகம் ,நினைவுலகம் )
கலையழகுகள் ................,
ஒன்றுமில்லை
உன் அழகின் முன்னால்
என் மனதின் ஆட்சி இன்று முதல்
உன்னுடையது ............,
இதோ உன் கிரீடம் ..............,