பாரதியை அழைப்போம்

எழுந்து வா...!உறங்கியது போதும்...!

அன்றே,
அடிமைப் பட்டோம்,
மாற்றந்தாயிடம்,

உணர்வு ஊட்டி,
வெறி ஏற்றி,
சுதந்திர தாகம் பெற்றோம்- உன்னால்
சுதந்திரமும் பெற்றோம்...!

இன்றும்,
அடிமைப் பட்டோம்,
பெற்ற தாய்நாட்டிலேயே,

மனம் மாற்ற,
எழுந்து வா...!உறங்கியது போதும்...!

ஆணியும், பனை ஓலையும்
கொண்டுள்ளோம்-எழுந்து வா
வாசகம் வரைய வேண்டும்
உன் வலக்கரம் கொண்டு..!

ஏராளம் செவிகள்
சாய்ந்து கிடக்கின்றன-எழுந்து வா
உன் நாவினைக் கொண்டு,
நீ வார்க்கும் வார்த்தைகள் வேண்டும்..!

தேன் வடியும் சில நெஞ்சங்களில்
கண்கள் வடிக்கும் நீர் சாரல்,
வேள்வித் தீயை அணைக்கும் முன்-எழுந்து வா
உன் எண்ணங்கள் எண்ணெய் ஊற்ற வேண்டும்..!

எண்கள் அச்சிட்ட காகிதங்கள்
சற்றே ஒதுங்கி நிற்கட்டும்-எழுந்து வா
உன் ஏடு எடுத்து வா..!

பல மொழிகளில் நீ பெற்றாய் புலமை
உம் தமிழ் மொழியை -தமிழர்க்கு
கற்பிக்க எழுந்து வா,
உறங்கியது போதும்...!

பல வயிற்றுக்கு சோறு இல்லை
ஜகத்தினை அழிக்க-எழுந்து வா
உறங்கியது போதும்..!

தந்தையர் நாட்டினைக் காத்திடவே
அழைக்கின்றோம்!

பூமித்தாயினிடம் பிரசவமாகி
எழுந்து வா..! உறங்கியது போதும்..!


விரைந்து வா..! விடியலும் வேண்டும்...!

எழுதியவர் : கலையரசி (12-Dec-14, 1:49 pm)
பார்வை : 189

மேலே