நீ இன்பமா இல்லை இம்சையா

தலைக்கு மேலே உள்ள வானமும்
காலுக்கு கீழே உள்ள பூமியும் காணாமல்
தவித்து போகிறேனடா...!
கண்சாடையில் காற்றாய் கரைந்து
சத்தமில்லா முத்தத்தில் காதலால் கட்டுண்டு
போகிறேனடா...!
நீ இன்பமா இல்லை
இம்சையா குழம்பி
தவிக்கிறேன் நானடா....!