காதலும் , வலியும்

இரவும் பகலும்
யாருக்காகவும்
காத்து இருக்காதது போல

காதலும் வலியும்
காதலர்களை
துரத்தாமல் விடுவதில்லை

பூமியின் சுழற்சியில்
பருவ மாற்றங்கள்
காதலின் வளர்சியில்
வலியின் சோதனைகள்

கடந்து போக விரும்பியவர்கள்
காதலை விட்டார்கள்

கொண்டு போக ஆசைப்பட்டவர்கள்
தற்கொலை பாறைகளுக்கு
உரமாகி போனார்கள்

நின்று புரிந்து கொண்டவர்கள்
சோதனை உலையில்
வார்த்து எடுக்கப்பட்டார்க்ள்

இந்த பூமியின் சுவாசம் ’
இயற்கையுடனான காதல் விளைவு
தோற்ப்பதேயில்லை

காதலும் தோற்ப்பதே இல்லை
அன்பு குறைவு படாத வரை !

எழுதியவர் : காதல் (12-Dec-14, 12:34 pm)
பார்வை : 68

மேலே