மனித நேயத்தின் மாசில்லா மாநகரம் - திருச்சி மாநகரம்

திருச்சி மாநகரின்
மலைக்கோட்டை
உலக வரைபடமாம்
நெற்றிக்குக் கிழே
நின்று தேசங்களை
நேசத்தோடு பார்க்கத்
துடிக்கும் ...........
பாவை விளக்கு ..!!!

ஊரூராய் தேடிப்பார்த்து
தாய்க் கருவின்
இருட்டறையில்
ஜோடியாய் நின்று கொண்டு
பகல்வேளை இரவுவேளை
எனப் பக்கம் பிரிக்காது
பாடித் திரியும்
காதல் பறவைகளின்
சரணாலயம் ..... நம்
முக்கொம்புவும் , கல்லணையும்....

இயற்கை எழுதிய
எண்ணற்ற கவிதைகளை
எங்கும் படிக்கலாம் .
ஈர நதிகள் நடக்கும்
வழியெங்கும்
பச்சை வயல்கள் பாய் விரிக்கும் ;
ஆனவரை தமிழகத்தை
ஆதரித்துக் காக்கும்
காவிரி ஆறு - நம்
திருச்சிக்கு உயிர்நாடி ...!!!

கருணை வேண்டின்
கருணை கிடைக்கும் ;
இரக்கம் வேண்டின்
இறைவன் அருள்வார் ;
இறைமை சூழ்ந்த
ஸ்ரீரங்கம் உள்ளிட்ட
கோயில்களின் கோகுலம்
நம் திருச்சி மாநகரம் ..!!

அன்பு ஒன்றையே
ஆயுதமாக கொண்ட
நம் திருச்சி மாநகர மக்கள் ....
நேசிக்கும் மனதிற்கு
நேசத்தின் வலி தெரியும் ..
சுவாசிக்கும் காற்று கூட
திருச்சி மீது
தென்றலாய் வீசும் .
மனித நேயத்தின்
மாசில்லா மாநகரம்
நம் திருச்சி மாநகரம் ....!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (12-Dec-14, 10:38 pm)
பார்வை : 198

மேலே