தலைப்பு என்ன

காணாக் காதலை எங்கேத் தேட
மூடிக் கிடந்த விழிகள் மூடா சூரியனாய்
அடங்கா குவியல் கவிதைகளை கொட்டி
விதைத் தெழுந்த தேவதயடி நீ !

பார்வைத் தொழில்
தரையை தொட்டேறிந்து நிலை தடுமாறி
உன் முகக் கண்ணாடியில்
பட்டு ஒளியாய் வீச தவிக் குவியல் தானே எனக்கு !

இரவுக் குளியல் புரிந்த
மலை எந்நீரில் மனங்கள்
இரண்டும் குளியல் (காதல்)
புரிந்து கொண்டது நாம் நின்ற நேரத்தில் !

பனிப் பாவை தாவணிக் கனவுகளை
பூமியில் போற்றி மகிழ்ச்சி பகிர்ந்தளித்த
தருண மாலையில்
வார்த்தையில்லா பார்வை மொழியை
பகிந்து வாழும்
வெண்ணிற புறாக்கள் இரண்டும் !

வெள்ளித் தாரகை பாட்டிசைத்து
மங்கள இசை வாய்விட்டு சிரித்து
மங்கையின் சிரிப்பு ஒளியும் கையசைத்து
பெண்ணின் உருவாய் வாழும்
கன்னித் தாரகையை வரவேற்கிறது !
அவள் வந்த தேரடியில் !

நான் கண்ட பாவை அவள்
பூமியில் வளர் பருவம் கானா
நிழல் உருவக் குழந்தை
ஊற்று குரல் கொண்டு அழைத்து அறிந்தாய் !
என்னை!

மண் வாசனை அறியா மழலை ஒன்று
மண்ணை மதித்து
மாற்றான் வலியுறா
தன்னை வழிநடத்தி செல்கிறாள் !

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (13-Dec-14, 9:46 am)
Tanglish : thalaippu yenna
பார்வை : 45

மேலே