உன் பார்வைக்குள் - வேலு

உயர உயர வளர்ந்து ஒளிந்து
மறைந்து போகிறேன் நொடி பொழுதில்
உன் பார்வைபட்டுடன்
அந்த மின்னல் கொடி போல !!!!
விடியும் வரை விளக்கேற்றி
விடிந்தபின்னும் விழித்திருக்கேன்
உன் பார்வையிலிருந்து
மேகத்தில் மறையும் விண்மீன் கூட்டம் போல !!!!