காதலில் புதியவன்

உன் பார்வைகள்
பேசிய மொழிக்கு அர்த்தம் கொண்டேன்
பெண்ணே! -காதல் என்று

கடவுள்
எனக்காக படைத்த
பெண்ணென்று உணர்தேன்! -பெண்ணே

நான்
கொண்ட காதலை
எனக்கு தெரிந்த மொழியில் காட்டினேன் -பெண்ணே
என் கையில் இரத்த கோடுகளாக

நீ
பயம்கொண்டு என்னை
விட்டுதூரம் சென்றாய் பெண்ணே !

என்னை பிடிக்கவில்லை
என்று சொல்லிவிட்டு போனாய் பெண்ணே!
அடுத்தகணம் என் இதய துடிப்பை
பாதியாக கொன்று விட்டாய்!

உன்னை பார்க்காத
ஒரு நொடி
என் ஆயுளுக்கு விரோதியானது பெண்ணே!

உன்னை தேடி
அலைந்து பொழுது என் கண்களுக்கு
பாலைவனத்தில் தெரியும்
கானல் நீராகத்தான்
தெரிந்தாய் பெண்ணே !

என்னை படைத்த தாய்,தந்தை மறந்து
நீ சென்ற இடமெல்லாம் சென்றேன்.
என் உடைகள் கிழிந்தும்
என் முகத்தில் புட்களோடு- பெண்ணே

பல வருடம் கழித்து
கண்டேன் -பெண்ணே

உனக்கு தெரியவில்லை
என்னை !

சொன்னாய்
உன் குழந்தைக்கு
இதோ "பைத்தியக்காரன்" என்று

விளையாட்டாய்

எழுதியவர் : ராஜு sweet (13-Dec-14, 6:57 pm)
சேர்த்தது : தமிழ்
Tanglish : naan konda kaadhal
பார்வை : 302

மேலே