அவள் வாழ்க்கை - சகி

@@அவள் வாழ்க்கை @@

பொறுப்பற்ற தந்தைக்கு
மகளாய் அவள்....

அன்னையின் அன்பே
அவள் உயிராய் என்றும்...

மற்றவர்கள் தூற்றினாலும்
ஆதரவாய் இருக்க வேண்டிய
தங்கையின் வார்த்தைகள்
மனமெங்கும் வலிகளாய் ...

பெண் என்றாலே
நண்பர்களின் எல்லை
ஓரளவு தானே...

மூத்தவள் என்பதால்
குடும்ப பாரம்
முழுவதும் மனதில்
சுமந்த மங்கையவள்....

பட்டம் இரண்டும்
பெற்றால் படிப்பில்...

ஆனால்...

தான் இலட்சிய படிப்பை
மேற்கொண்டு தொடரமுடியவில்லை

தன் சராசரி விருப்பங்களையும்
கற்பனையிலே நிறைவேற்றினாள்...

மன(ண)வாழ்க்கையும்
மனதில் கற்பனையே ....

வாழ்க்கை அழைத்துசெல்லும்
பாதையில் பயணமாகிறாள் ...

விடியும் பொழுது ஏதேனும்
ஒருநாள் நமக்காக விடியும்
என்ற நம்பிக்கையில்....

எழுதியவர் : சகி (15-Dec-14, 1:30 pm)
பார்வை : 124

மேலே