நானே தொலைந்தேனே

பொய்யாகி போனேனே
இந்த பிறப்பின் பிழையால் நானே
பிறந்தாலே போதும்
பிறை தேடும் உயிராய் ஆனேன்

கவலை காகிதம் போல
அதில் எழுத நினைக்காத மேல
கவலை கைவிட்டு போக
காற்றில் பறக்கவிடு நாள

மனச முழுசாக மறைத்து
வெளியில் திரியாத அலைந்து
பழச பகலாக நினைத்து
பரிசல் ஒட்டாத நனைத்து

பொய்யாலே மெய்யாகி
பல இன்பம் துன்பத்தை சுமந்தேன்
வழிதவறி வீடு வந்த
அந்த பறவையை போலவே நடிக்கிறேன்

தடுமாறி தரையில் விழுகையில்
தூக்கி விட கைகள் இல்லை
தானாக எழுந்து நடக்கையில்
நீக்கி விட வார்த்தையில்லை

கதையில் சொல்லாத பலவும்
கனவில் தானாக உலவும்
பையில் பிடித்துவைத்த நிலவும்
பாதியில் பிடிக்காமல் நழுவும்

காசு பணமெல்லாம் ஒருநாள்
மாசு ஆகிப்போகும் மறுநாள்
நாசி உள்ளவரை பலநாள்
தூசி தட்டியவுடன் திருநாள்

எழுதியவர் : prabakaran (15-Dec-14, 1:12 pm)
சேர்த்தது : பிரபாகரன் செ
பார்வை : 100

மேலே