சுயப்பட்டியல்
அம்மாவின் பாவடைக்கு
நாடா கோத்தும்
நாயிக்கு பொட்டு வைத்தும்
பழகி வளர்ந்த
பௌர்ணமி பி.ஏ(பொருளியில்)
செய்திதாளில்
வாண்டடுக்கும்
இண்டர்வியூக்கும்
பேனா வைத்து சுழித்து
பொருத்தமான வேலையாகயிருந்தாள்
அம்மா காதில் உரைப்பாள்
அம்மா கோழிமுட்டையோ
புளியையோ விற்க
நுகர்வோர் தேடுவாள் அவ்வளவுதான்
சுயப்பட்டியல் தயாரித்தல் தொடங்கி
பேருந்து எண்
பயண நேரம்
சாப்பாட்டு செலவு
பயணப்பட வேண்டிய வீதி
எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு
கடன்கொடுக்கும்
மில்காரன் பொண்டாட்டியிடம்
பத்துபைசா வட்டிக்கு
கை நாட்டு வைக்கு
அப்பா மனது எவ்வளவு பெரிது
இது எல்லா தெரிந்த
பௌர்ணமி பி.ஏ(பொருளியல்)
ஒவ்வொரு
இண்டர்வியூ தொல்லியின்
போதெல்லாம்
நினைக்கிறாள்
வேறு யார் மகளாவது
பிறந்திருந்தாள் அவர் செல்வாக்கில்
தனக்கொரு வேலை
கிடைத்திருக்குமென்று
இது எப்படி நியாம்?