`வாழ்க்கைப் பாதை

என் வாழ்க்கையை
மீட்டிப் பார்க்கிறேன்
ஒரு கணம்
துறந்து வந்த சொந்தங்களையும்
தொடர்பற்றுப்போன நட்புக்களையும்
துன்பத்தில் தோல் கொடுத்த உறவுகளையும்
மீட்டிப்பார்க்கிறேன் ஒரு கணம்
அஸ்தமித்த இன்பங்களையும்
அழத நாட்களையும்
தனிமைப்பட்ட
நிமிடங்களையும்
தனிப்பட்ட
உண்மைகளையும்
விழித்திருந்த இரவுகளையும்
விழி தந்த வார்த்தைகளையும்
மீட்டிப்பர்க்கிறேன் ஒரு கணம்
சொல்ல மறந்த நிஜங்களையும்
சொல்லியும் உணராத வேதனைகளையும்
கேட்டும் கிடைக்காத வரங்களையும்
கிடைத்தும் நிறைவேறாத ஆசைகளையும்
மீட்டிப்பர்க்கிறேனொரு கணம்

எழுதியவர் : சமீர் (17-Dec-14, 2:20 pm)
பார்வை : 76

மேலே