கவியாளனின் கற்பனை உலகம் - 4 சந்தோஷ்

எங்கிருந்தோ வந்திட்ட இதயக்கள்ளன்
இதயம் தொலைத்திட துடிக்கும் கன்னியொருத்தி.
காதல் கமலம் மலர்ந்திடும் தருணம்.
என்ன நிகழும்.. என்ன நிகழும் ???

----

உற்று நோக்கிய கவியாளன்பால்
பற்றுக்கொண்டாள்.. காதல் பற்றிக்கொண்டாள்?
முற்றும் மறந்து காதல் சித்தாந்தம் தேடலானாள்
மைவிழியால் காதல் மையல்கொள்ள நேரிட்டாள்.

கவியாளனின் விழியில் மெய்மறந்தாளோ?- தமிழ்
மொழியாளனின் கவியில் கரைந்திட்டாளோ ?
தாழியுடைந்து பதறியோடும் நீரின்நிலையாய்
தாலிவரம் கேட்டிட துடித்தாளோ ?


இக்கொடியிடையாளின் மனநிலைதானோ எதுதானோ ?
கவியாளனின் கவிவேலியில் படர்ந்திட துடிக்குமோ ?
--

கருந்திரள் தேகம், கருமைநிற ரோமம்
விரிந்த மார்பு, கூர்மை விழிகள்
கூரிய நாசி, வீரிய வெண்பற்கள்
களிறின் பலமாய் காலழகு
புரவியின் வேகமாய் நடையழகு
புலியின் வீரமாய் மீசையழகு

அலர்விழியாளின் மன்னவன் அழகோ...!
அந்த மன்மதனின் மறுபிறப்போ?

உள்ளத்தினால் எழுமா காதல்?- யாக்கை
நோக்கியதன் தாகமா காதல்?
கண்டதும் கனிந்திடுமோ காதல் ?-நீர்நிலையில்
கல்பட்டதும் வரைந்திடாதோ நீர்வட்டம்?

--
கவியாளனின் காந்தவிழியினை நோக்கினாள் பைங்கிளி
கிளியானவளின் மலர்விழியால் கள்வன் காதலறிந்திட,
அறிந்திட்டகாதலை ருசித்திட துடித்தது கரங்கள்
கரங்களில் காமகாரம் உச்சமோ உச்சம்..!!

இனி நிகழ்வதோ காதலோ காதல்...!

(தொடரும் )


-இரா. சந்தோஷ் குமார்

--
## அடுத்த பகுதியில் நிச்சயம் உண்டு .. காதல் இலக்கிய விருந்து ..!

எழுதியவர் : -இரா. சந்தோஷ் குமார் (18-Dec-14, 3:39 pm)
பார்வை : 185

சிறந்த கவிதைகள்

மேலே