தழைத்திடு நீ தளிரே - ப்ரியன்

சிரம் தாழா என்னை
__சிறு பிள்ளை ஆக்கி
உரம் ஆனா நெஞ்சை
__உரசி இழித்து ஊரும்
புறம் பேசி நாளும்
__பொழுதை கழித்து போக
மரம்போல பட்டு வாழ்வும்
__மாறிடிமோ என்று இருக்க
கரம் கொடுத்து என்னை
__காத்திட என் இறைவன்
வரம் ஒன்று கொடுக்க - நீ
__வந்தாய் என் வாழ்வில்

வனம் பூத்த மலருன்னை
__வாழ்வு என்று எண்ணி
தனம் யாவும் இழந்தாலும்
__தலை மகன்நீ வேண்டி
கனம் எனறு நினையாமல்
__கண்ணில் வைத்து காத்து
குணம் மாறி குழந்தையாகி
__குதித்து உனக்காய் விளையாடி
தினம் உன்பேர் சொல்லி
__திகட்டா இன்பம் ஊட்டி
மனம் முழுதும் பூரித்தேன் - நீ
__மகிழ்வாய் புன்னகை செய்ய

தத்தி நடந்து வளர்ந்திடு
__தளிரே நற் பூச்சரமே
கத்தி கவிதையாய் பேசிடு
__கலையின் தேன் குரலே
எத்தி விட்டு முன்னேறிடு
__எதிரே வரும் தடைகளை
புத்தி கூர்மையாய் இருந்திடு
__புகழும் மண்ணில் நிலைபெற
உத்திகள் யாவும் அறிந்திடு
__உலகில் இங்கு வாழ்ந்திட
சித்தி விநாயகன் துணையிருப்பான்- நீ
__செவ்வனே இதை செய்திட

படம் : நன்றி_PHOTO BOYS

எழுதியவர் : ப்ரியன் (19-Dec-14, 1:27 am)
பார்வை : 695

மேலே