அருள்வயோ விநாயகா

தொந்தி விநாயகரே
முந்தி வினை தீர்ப்பவரே....

தொல்லைகளை அழிப்பவரே
செல்லப்பிள்ளையாரே.....

அரசமரத்து அரசரே
ஆல மரத்துப் பிரியரே...

தந்தைக்கு முந்திய
தனையனே....

தாய் தந்தையரை சுற்றி வந்து
கனியைப் பெற்ற தமையனே...

உடலுக்குள்ளே உலகை
அடைக்கிய பாணை வயிற்று
பாலகனே.....

முக்கண்ணணுக்கு முன்பே
படையல் பெறும் முதல்வனே....

நடன விநாயகரே
சந்திரனிடம் சினம்
கொண்ட நாயகனே...

வெள்ளி மலை ஆண்டவனே
கோட்டமலையில் அருள்
வழங்கும் அப்பனே....

இடரினில் துவண்டு போகும்
பர்த்தர்களை தும்பிக்கை போல்
நம்பிக்கை காட்டி வரம் கொடுக்கும்
ஆனைமுகத்தோனே அப்பனே
விநாயகா......

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (19-Dec-14, 8:01 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 65

மேலே