நான் பெற்ற விருது - சந்தோஷ்

வழக்கத்திற்கு மாறாக நேற்று மாலை எனக்கு ஒரு மாயை. கதிரவன் அந்தி மாலையாய் மறையும் தருணம் , எனக்கு மட்டும் உதயமானதாக ஒரு மாயை. எனக்கும் கூட இப்போது என்னில் தோன்றிய நேற்றைய மாயை வியப்பாக இருக்கிறது. ஆனாலும் மகிழ்ச்சியாக.. மனம் நிறைவாக இருக்கிறது.

ஏதோ ஒன்று சாதித்த பிறகு ஒரு வெற்றி களைப்பில் குதூகலமாய் உற்சாகமாய் உணர்வோமே.. அந்த கலை இப்போது என் முகத்தில்..! இருந்தாலும் நான் இன்னும் சாதனையின் முதல் பக்கத்தை கூட விரிக்கவில்லை. என்பதே உண்மை.

சமீபநாட்களாக சென்னை மெரீனா கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்காவும் ..கவிதை எழுதுவதற்கும் செல்வதுண்டு.. அப்படி சென்று நடைப்பயிற்சியின் மூலமாகவே எனக்கு புதிதாக அறிமுகமான ஆண், பெண் நண்பர்கள் ஏராளம். அதில் ஒருவர் எனது படைப்புக்களை கேட்டு வாங்கி படிக்கும் ஒரு மூத்த நண்பரும் அடக்கம். அவர் எனக்கு நட்பாக மிக நெருக்கம்.

நேற்று மாலை அந்த மூத்த நண்பர் என் அலைப்பேசிக்கு அழைத்து "நீங்கள் எழுதிய ஒரு படைப்புக்காக என் நண்பரின் சார்பா ஒரு விருது காத்துக்கொண்டிருக்கிறது நாம் எப்போதும் சந்திக்கும் கண்ணகி சிலை அருகே வாருங்கள் என் குடும்ப நண்பருடன் நான் காத்திருக்கிறேன் " என அழைத்தார் .

" எனக்கா ? அட போங்க சார்.. ஜோக் பண்ணாதீங்க. எனக்கும் தமிழ் பிழையில்லாமல் எழுத தெரியாது. விருது எனக்கு யார் கொடுக்கபோறாங்க? விருந்துன்னு சொல்லி இருப்பாங்க.. நீங்க விருதுன்னு மாத்தி சொல்றீங்கன்னு நினைக்கிறேன் " என்றேன்.

" தம்பி..விருது , விருந்துன்னு சொல்லும் உங்க புலமையை அப்புறம் மெச்சிக்கிறேன். சீக்கிரம் வாங்க " என கட்டளையிட்டார்.

சென்றேன். அங்கு....!

என்னை அழைத்த அந்த நண்பருக்கு அருகில் விலையுர்ந்த ஒரு கார்... அதில் அமர்ந்திருக்கிறார் ஒரு நடுத்தர வயது பெண்மணி. நண்பர் அந்த பெண்மணியிடம் என்னை அறிமுக செய்ய முயலும்போதே... அந்த பெண்மணி என்னை நோக்கி
" நீங்க தான் அந்த சந்தோஷ் குமாரா "

"யெஸ் மேம் " என்றேன்.

அடுத்த நொடியில் நிகழ்ந்தவைதான் எனனை அதிர வைத்துவிட்டன்.

ஆம் யெஸ் என்று நான் சொன்ன நொடியில் என்னை ஆரத்தழுவிக்கொண்டார் அந்த பெண். ஏன் எதற்கு என புரியாமல் நான் தவிக்க கூட விடவில்லை அவர்...

" நீங்க எழுதின ஒரு கவிதை என் பொண்ணோட வாழ்க்கையை மாத்தி இருக்கு .. எங்க லைப் ஸ்டைலும் மாறி இருக்கு. உங்களுக்கு தேங்கஸ் சொல்லத்தான் நேர்ல வந்தேன் அந்த கவிதையில நீங்க எழுதின ஆக்ரோஷமான அந்த வரிகள் தான் இந்த மாற்றத்திற்கான காரணம் " என்றார்..

என்ன வரி ? என்ன கவிதை என நான் வினவ......

அவர் பெண் படித்துக்காட்டினார் அந்த வரிகளை

வன்கொடுமைக்கான முதல் குற்றவாளிகளே..!
கலாச்சாரத்தை சீரழிக்கும் காரணிகளே..!
பணதிமிர் பிடித்த பெற்றோர்களே..!-பிள்ளைகளை
வெறும் காமத்திற்குதான் பெற்று விட்டீர்களோ ?
உங்கள் பேர் சொல்ல திரிகிறதோ வாரிசுகள் ?


இனியேனும் திருந்திட பாருங்கள்!
இல்லையேல்...
புதைகுழியில் வீழ்ந்து செத்துமடியுங்கள்..! "

செத்திருக்கனும் சந்தோஷ்.... ஆனா மனசு மாறி வாழ்ந்திட்டு இருக்கோம்.

" மேடம் எனக்கு ஒன்னுமே புரியல.. குழப்பமாகவும் இருக்கு, என்னன்னு தெளிவா சொல்லுங்க. என்னோடு எழுத்து உங்கள கஷ்டப்படுத்திருச்சா ? " ஒரு வித குற்றணர்வும் வந்த விட்டது எனக்கு.

" இல்ல சந்தோஷ் . உங்க எழுத்து புரியவைத்துவிட்டது.. " என்றவர் தொடர்ந்தார் .

" எனக்கு ஒரு பொண்ணு இருக்கா .. அவ பேரு ***** , என் ஹஸ்பண்ட் பிசினஸ் மேன். எங்களுக்கு இவ ஒரே ஒரு செல்லப்பொண்ணு. ஸ்கூல்ல படிக்கிறா..என்ன ஆச்சுன்னா.. எப்போ பார்த்தாலும் செல்போனும் கையுமா சுத்திட்டு இருப்பா சந்தோஷ்.. அதிலும் எங்க நண்பர் குடும்பத்தில இருக்கிற ஒரு சின்ன பையன் கூட செல்போன்ல எதையோ காட்டிட்டு பேசிட்டு சிரிச்சுட்டும் இருப்பா. நானும் சின்னஞ்சிறுகங்கன்னு நம்பி எதுவும் கண்டுக்கல.. ஒரு நாள் தீடிர்ன்னு அந்த பையனை நான் லவ் பண்றேன். எனக்கு இப்போ இருக்கிற செல்போனை விட காஸ்ட்லியா வாங்கிகொடுங்க .. நான் அவனுக்கு கிப்ட்டா கொடுக்கனும்ன்னு அவ அப்பாகிட்ட கேட்டா.. அதுக்கு அவங்க அப்பாவும் " என்னடா லவ்வா.... உனக்கா " ந்னு அசால்ட்டா ஜாலியாதான் கேட்டார்.. ஆனா அவ சொன்ன பதில் எங்களுக்கு தூக்கி வாறி போட்டிடுச்சு.... அதுக்கு அப்புறம் செல்லமா இருந்த அவளை நாங்க ரொம்ப கண்டிஷன் பண்ணி அந்த பையனை பார்க்க விடாம பண்ணினோம்.. அப்போதான் ஒரு விபரீதம் ஆச்சு.. தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு.. நான் அவனை லவ் பண்றேன்.. என்னை நீங்க புரிஞ்சுக்கல.. இதோ பாருங்கன்னு ஒரு வீடியோ காட்டினா.. அதுல எம் பொண்ணும் .. அந்த சிறுவனும்.... *************** " சொல்லிக்கொண்டிருதவரின் கண்ணீல் நீர்த்திவலைகள்... என்னவாக இருக்கும் என்று யூகித்துவிட்டு...

" சரி மேம் ரிலாக்ஸ்.. அப்புறம் உங்க பொண்ணு........ "

" ம்ம்ம்ம் அப்புறம் அவ உயிரை காப்பாத்திட்டோம். ஆனா அவ கிட்ட செல்போன் இருப்பதை நாங்க பெரிசா எடுத்துக்கல... அப்போதான் உங்க கவிதையை வெப்சைட்ல படிச்சேன்.. செல்போன் சின்ன புள்ளைகளுக்கு தேவையா.. அதுனால என்ன என்ன பிரச்சினைன்னு அதுல எழுதி இருந்தீங்க.. அதல கடைசி லைன் எனனை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிச்சு சந்தோஷ்.. அது வரைக்கும் கூட செல்போனால தான் என் பொண்ணு இப்படி கெட்டுப்போனான்னு எங்க புத்திக்கு புரியல.. சிம்பிள் விஷயம் தான்.. பட் வேல்யூ பாயண்டா அப்போ எனக்கு புரிஞ்சுது. செல்போன் டீன் ஏஜ் பசங்க பொண்ணுக்கு எதுக்குன்னு ஒரு கேள்வி... யாருக்கு புரியுமோ புரியாதோ சந்தோஷ்.. எங்களுக்கு புரிஞ்சது.. அந்த டைம்... ரியலைஸ் பண்ணினோம்... அப்போ தான் என் பொண்ணுகிட்ட இருந்து செல்போன் வாங்கி வச்சி கொடுக்காம இருந்தேன்.. அதுல அவ ரொம்ப டிஸ்டர்ப் ஆகி . ... மெண்ட்ல மாதிரி ஆகிட்டா.. எங்கள மிரட்ட ஆரம்பிச்சா.. ஒன்னு செல்போன் கொடுங்க.. இல்லன்னா அந்த பையன்னை டெய்லியும் நான் பார்க்க விடுங்க.ன்னு மிரட்ட ஆரம்பிச்சா.. பைத்தியமா மாறிட்டா.. அந்த நேரத்தில நானும் அவ அப்பாவும் பட்ட கஷ்டம் எப்படி சொல்ல,., யார்கிட்டயும் இந்த அசிங்கத்த சொல்லமுடியாம.. தவிச்ச தவிப்பு... இருக்கே.... சந்தோஷ் நீங்க அந்த கவிதையை பொழுதுப்போக்க கூட எழுதி இருக்கலாம்.. ஆனா.. எங்கலைப் ஸ்டைல் மாத்த வச்சது உங்க கவிதை.... இப்போ நாங்க கூட செல்போன் யூஸ் பண்ணுவதே இல்ல.. அவ வளரட்டும் அப்போ செல்போன் பத்தி யோசிக்கலாம். இப்போ நாங்க அவளுக்காக வீடு மாறி.. வந்து.. ஜஸ்ட் ஒரு லேண்ட்லைன் கனெக்ஷன் மட்டும் வச்சிட்டு வாழ்ந்திட்டு இருக்கோம் " படபட வென கண்ணீரும் கோபமாய் சொன்னவர்.. ஒர் அழகிய தாள் போர்த்தப்பட்ட ஒரு பெட்டியை எனக்கு கொடுத்து.. " ப்ளீஸ் இத வாங்கிகோங்க சந்தோஷ்....தப்பா எடுத்துக்க வேண்டாம்.. "என்றார்

அந்த பரிசு.. இல்லை இல்லை விருது... " அழகான கைக்கடிகாரம்.. "

உணர்ச்சியின் உச்சம்... நான் என்ன சொல்லமுடியும்... தெரியவில்லை.. சொல்ல வார்தைகளற்று உளற ஆரம்பித்தேன் " மேடம் ஒகே .. பட் நான் அந்த கவிதை எழுதாம இருந்தாலும்.. வேறு எதோ ஒரு வழியில உங்க தப்பை புரிஞ்சுகிட்டு இருந்திப்பீங்க இல்லையா... ? " என நான் சொல்ல சொல்ல குறுக்கிட்டவராக.. " சந்தோஷ் டைம்மிங்ன்னு ஒன்னு இருக்கு.. எப்போ நமக்கு அட்வைஸ் தேவைப்படும்ன்னு இருக்கு.. நீங்க எழுதின நேரம் அப்படி.. அதுக்குதான் .. பட் கவிதை சூப்பர் வேல்யூ பாயிண்ட்ஸ்... " என்றார்.. மனதுக்குள் நான் நண்பர் " நாகூர் கவி" க்கு நன்றி சொல்லிக்கொண்டு இருந்தேன். ஆம் அவர்தான் அந்த கவிதையை எழுத மையக்கரு கொடுத்தார்...! ( கவிதையின் தலைப்பு "அலைபேசியில் சீரழியும் இளம் சிறார்கள்" - [180400] )

இறுதியாக விடைப்பெற்று .. அந்த விலையுர்ந்த காரினை ஓட்டி சென்றவர்... மீண்டும் திரும்பி ரிவர்ஸில் வந்தார்.... என்னிடம்..

" சந்தோஷ் ......! ஆட்டோகிராப் ப்ளீஸ் ....................."

சில நொடி என்னிதயம் நின்று துடித்தது... நானா... நானா... ஆட்டோகிராப்பா..... உடல் ஆடியது... உயிர் கிள்ளியது ... நானே எத்தனை பிரபலங்களிடம் ஆட்டோகிராப் வாங்க துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறேன்...

" மேம்... ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஓவராவும் இருக்குன்"னு சொன்னேன்...

"சந்தோஷ் ..! நீங்க சாதிப்பீங்க... ப்ளீஸ் .....போடுங்க "

கம்பீரமாய் போட்டுக்கொடுத்தேன்... ஏ. ஆர் .ரகுமான் ஸ்டைலில்....

" எல்லா புகழும் என் தமிழுக்கே...... உங்கள் அன்பில் என்றென்றும்....
இரா. சந்தோஷ் குமார்... "

நான் போட்ட முதல் ஆட்டோகிராப்.........................................!!


அந்த நடுத்தரவயது பெண்மணியும் அவரை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பரும் விடைப்பெற்றுக்கொண்டு சென்றபிறகு.... மீண்டும் அந்த விருது.. கைக்கடிகாரத்தை பார்த்தேன்.. " யெஸ் .. நல்ல நேரம் "


தோழர்களே.... ! நாம் எழுதும் எந்த ஒரு சமூகப்படைப்பும் உலகில் எங்கோ இருக்கும் யாரோ ஒருவரின் வாழ்வை மாற்றிக்கொண்டோ.. பாதித்துக்கொண்டோ இருக்கும்.. நமக்கு அது தெரியாமல் கூட இருக்கும்... தெரியவும் வேண்டாம்.. நம் பணி எழுதுவது..... எழுதுவது.. எழுதுவது மட்டுமே... என்பதை சொல்லவே இந்த நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துக்கொண்டேன் ..!


நான் பெற்ற இந்த.... விருது.... எழுத்து.காம் மற்றும் எழுத்து சொந்தங்களுக்கு சமர்ப்பணம்....!!!!

நன்றி தோழமைகளே...!

எழுதியவர் : -இரா.சந்தோஷ் குமார். (19-Dec-14, 8:53 pm)
பார்வை : 316

மேலே