சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 24 ஏடி யோசநலு சேஸேவுரா – ராகம் கிரணாவளி
'கிரணாவளி' என்ற ராகத்தில் அமைந்த 'ஏடி யோசநலு சேஸேவுரா' என்ற பாடலின் பொருளும், பாடலும் கீழே தருகிறேன்.
பொருளுரை:
நீ என்ன யோசனை செய்கிறாய்? (நீ என்னைக் காக்க விரும்பினால்) உனக்கு எதிராகப் பேசுபவர் எவருமில்லை.
நீ கொடுத்த வாக்கைத் தவறக்கூடாது. கோடி தெய்வங்களுள் உயர்ந்தவன் நீ.
சுத்த வீரர்களில் பின்வாங்காதவனென்றும், இரண்டு விதமாகப் பேசுபவன் அல்லனென்றும், அண்டங்களனைத்தையும் பாலிப்பவனென்றும் மகா முனிவர்கள் உன்னை வருணித்துள்ளனர்.
பாடல்:
பல்லவி:
ஏடி யோசநலு சேஸேவுரா
எது ரு ப ல்குவா ரெவரு லேருரா (ஏ)
அனுபல்லவி:
நோடி மாட ஜார்ச்சக ராது ரா
கோடி வேல்புலலோ மேடியை ந நீ (வே)
சரணம்:
மெண்டு சூருலலோ வெநுக தீயவநி
ரெண்டு மாடலாடே வாடு கா த நி
அண்ட கோட்ல பாலிஞ்சுவாட நி
சண்ட மௌநுலாட த்யாக ராஜநுத (ஏ)
Etiyochana - Stephen Devassy f. Varijasree - Music Mojo Season 2 - Kappa TV என்று கூகிலில் பதிந்து, கீ போர்டு மற்றும் மாடர்ன் இசைக் கருவிகளுடன் வாரிஜாஸ்ரீ என்ற இளம்பெண் அருமையாகப் பாடுவதைக் கேட்கலாம்.
இப்பாடலை CARNATIC VOCAL | SONGS OF THYAGARAJA | JUKEBOX என்று கூகிலில் பதிந்து, பிரபல குரலிசைக் கலைஞர் சுதா ரகுநாதன் பாடுவதைக் கேட்கலாம்.
.
CARNATIC VOCAL | G.N. BALASUBRAMANIAM | SANGEETHA KALANIDHI | JUKEBOX என்று கூகிலில் பதிந்து, பிரபல குரலிசைக் கலைஞர் G.N.பாலசுப்பிரமணியம் பாடுவதைக் கேட்கலாம்.
Eti Yochanalu - Kiranavali: Dr. M. Balamuralikrishna என்று கூகிலில் பதிந்து, பிரபல குரலிசைக் கலைஞர் M.பாலமுரளி கிருஷ்ணா பாடுவதைக் கேட்கலாம்.
eti yOchanalu - kiraNAvaLi - dEsAdi – tyAgarAja என்று கூகிலில் பதிந்து, குரலிசைக் கலைஞர் வைரமங்கலம் லட்சுமி நாராயணன் பாடுவதைக் கேட்கலாம்.
Ramya Lakkaraju: ETi yOchanalu என்று கூகிலில் பதிந்து, சுமார் 10 வயதுள்ள ரம்யா லக்கராஜு என்ற சிறுமி வீணையில் ’ஏடி யோசநலு’ வாசிப்பதைக் கேட்கலாம்.
Adithi Eti yochanalu என்று கூகிலில் பதிந்து, 5 வயது பெண் குழந்தை அதிதி ’ஏடி யோசநலு’ அருமையாக, இயல்பாகப் பாடுவதைக் கேட்கலாம்.