கிறுக்கல் விழி கிறுக்கியே

கிறுக்கல் விழி
கிறுக்கியே
உன்னால்
கிறுக்கி கிறுக்கி
நானும்
கிறுக்கனாகிவிட்டேன்
காதல் பிரிவுகளை
அடிமாறாமல்
அப்படியே தந்தவளே
உடலோடு உயிர்
பண்ணி கிடப்பது போல்
எனனோடு நீ
பிணைந்து கிடக்கிறாய்
அழியாத காதல்
என்னிடமிருக்க
நான் மட்டும்
சிதைவுற்று
அழிவதேனோ.?
உன் பிரிவுகளால்
வெட்டி வீசப்படுகிறேன்
துண்டுகளாக
அதை அள்ளியெடுத்து
இறுதிச் சடங்கு
செய்வதற்காவது வந்துவிடு
மறக்காமல் வந்துவிடு
மண்டியிட்டு கேட்கிறேன்
மறுக்காமல் வந்துவிடு
என்னுயிர் மறிக்கும் முன்
வந்துவிடு